பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

16. பயனில சொல்லாமை

109. பொரு டிர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்து

மாசறு காட்சி யவர்.

( இ-ள்) பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார், மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், (எ. அ).

இது, தெளிவுடையார் கூறாரென்றது. 9

200. நயனில சொல்லினுஞ் செல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

(இ-ள்) நயனில்லாதன சொல்லினுஞ் சொல்ல அமையும்; பயனில்லாதவற்றைச் சான்றோர் சொல்லாமை நன்று, (எ-று).

இது, சான்றோர்க்கு ஆகாதென்றது, 10

17. தீவினையச்சம்.

தீவினையச்சமாவது தீவினைகளைப் பிறர்க்குச் செய்யாமை. மேல் மனத்தினானும் மொழியினானும் செய்ய லாகாதன சொன் னார். இஃது உறுப்பினாற் செய்யலாகாதாதலின் அவையிற்றின் பிற்கூறப் பட்டது.

201. தன்னைத்தான் காதலனாயி னெனைத்தொன்ற ந்

துன்னற்க தீவினைப் பால்.

(இ-ள்) தன்னைத் தான் காதலிக்க வல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியானவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக, (எ-று).

இது, தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது. 1.

202. எனைப்பகை யுற்றாரு முய் வர் வினைப் கை

வியாது பின்சென் றடும்.