பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

17. தீவினையச்சம்

210. அறிவினு ளெல்லாந் தலையென்ப திய செறுவார்க்குஞ் செய்யா விடல் .

(இ-ள்) எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற் றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர், தமக்குத் தீமை செய்தார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை எ-று) .

இஃது, எல்லாவற்றினுந் தலைமை யுடைத்தென்றவாறு 10

18. ஒப்புரவறிதல்

ஒப்புரவறிதலாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்குமாற்றல் இலனெனினும் தன்னளவிற்கும் தன வருவாயளவிற்கும் ஏற்கத்தக்கார்க்குத் தக்கனவறிந்து கொடுத்தல். மேல் அன்புடைமை முதலாகத் தீவினையச்சம் ஈறாகக் கூறப்பட்ட அதிகாரங்கள் நல்கூர்ந்தாரால் செய்யப்படும் என்று கூறினார். இது நல்குரவினிங்கிச் செல்வரல்லாதார்க்குச் செய்யப்படுதலின் அவையிற்றின் பின் கூறப்பட்டது. இதுவும் ஈகையன்றே இதனை விருந்தோம்பலோடே சேரக்கூறற் பாற்றெனின் அவ்வாறு வ தியார்க்குச் செய்ய வேண்டுமாதலால் ஈண்டுக் கூறினாரென்று .ெ ,ாள்ளப்படும். ஆயின் விருந்தோம்பலையும் ஈண்டுக் கூறற்பாற். றெனின் அவ்வாறு கூறின் அது நல் கூர்ந்தாராற் செய்யப்படா தாமாதலாற் கிடந்தவாறே கொள்ளப்படும்.

211 தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

(இ-ன் ஒருவன் முயன்று பொருள் ஈட்டியதெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காக (எ-று).

இது, பொருளுள் டானால் பயன் ஒப்புரவுசெய்த லென்றது 1.