பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

18. ஒப்புரவறிதல்

எனின் என்றதனாற்கேடுவாரா தென்பதே துணிபு, கெட்டானா யினும் அதனை ஆக்கமாகக் கொள்ளப்படும் (எ-று) பிற்பயப்பது நன்மையாதலான். 5

216. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவ ம்

பேரறி வாளன் றிரு.

(இ-ள்) ஊர் உண்கேணி நீர் நிறையப் புகுந்தா லொக்கும்,

உலகத்தா ரெல்லாரும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம், (எ-று),

இஃது, ஒப்புரவறிவார்க்கு உள்ளதாகிய செல்வம் நச்சிச் செ றார்க்கு வேண்டியவாறு முகக்கலாமென்றது 6

217. பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வ

நயனுடை யான் கட் படி ன்.

(இ-ள்) பயன்படுமரம் ஊர்க்கு நடுவே பழுத்தாற் போலும்; பிறரால் விரும்பப் படுவான் மாட்டுச் செல்வ முண்டாயின், (எ-று).

மேல், செல்வார்க்கு முகக்கலாமென்றார்; இஃது ஊர் நடுவான மரத்தின் கீழ்ப் பயன் கருதாது தமது இச்சையாலிருந்தார்க்குப் பயன் தானே வந்து அமையுமது போலத் தாமே கொண்டு சென்று கொடுப்பர் என்றற்கு வேறு படுத்து உவமை கூறப்பட்டது.

இது, வேண்டாதார்க்கும் பயன்படு மென்றது. 7

218. மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்.

(இ-ஸ்) பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகையான் மாட்டு உண்டாயின், (எ-று) ,

தப்பினார் என்ப ஒளித்தாரை. இவன் தகவானாதலின் செல்வம் உலகத்தார்க்குப் பசிமருந்தாமென்றது. இவற்றுள் ஊருணி நீர் நிறைந்தாற் போலும் என்றும், பயன்மரம் உள்ளுர்ப்பழுத்தற்றாம்