பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

3. துற வறவியல் (13)

துறவறமாவது தவமேற்கொண்டொழுகுதல். அதுவானப் பிரத்தம் சந்நியாதம் என இரண்டு வகைப்படும். அது, கூறப்பட்ட அதிகாரம் பதின்மூன்றும் அருளுடைமையும் புலான் மறுத்த லும் தவ மும் ஒரோவ திகாரத்தானும், அவற்றி ன் பின் காமம் வெகுளி மயக்க மென்று மூன்று குற்றத்தினும் காமப் பகுதியாயின. தவிர்தல் மூன்றதி காரத்தானும் வெகுளிப் பகுதியாயின தவிர்தல் மூன்றதிகாரத் தானும். மயக்கந் தவிர்த்தல் ஒரதிகாரத்தானும் கூறப்பட்டது. அவற்றுள் அருளுடைமையும் புலான் மறுத்தலும் இல் வாழ்வார்க் கும் செய்யலாம் ஆதலின் அதன் பின்ன கத்தவத்திற்கு முன்னாகக் கூறப்பட்டன. அவற்றுள்,

1. அருளுடைமை

அருளுடைமையாவது யாதானுமோருயிர் இடர்ப்படின் அதற் துத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தில்ை வருந்துமாறு போல வருந்தும் ஈரமுடைமை. இல்வாழ்வார்க்கு அன்புடைை மசிறந்தாற் போல இஃது இல்லத்திற்கும் சிறந்ததாகலின் இது முற்கூறப் பட்டது. மேற்கூறிய புகழ்பட வாழ்தலின் முதிர்ச்சியாதலின் அதன் பிற்கூறப்பட்ட தெனினுமமையும்.

241. த ல் லாற்றா னாடி யருனாள் க பல் லாற்றாற்

றேரினு மஃதே துணை.

( இ-ள்) நல் வழி யாலே நாடி அருளயுைண்டாக்குக: பல வழி யினும் ஒடியா ராயினும், தமக்கு அருளே துணையாம். (எ- று) .

‘நல் வழியான்’ என்றது. அருளுண்டாகப் பலவறங்களை யுஞ் செய்கவென்றது. நாடி என்றது பலவறத்தையும் ஆராய்ந்து என்ற வாறு பல்லாற்றானென்றது எல்லாச் சமயத்திலும் என்றவாறு.

242. அருட்செல்வ ஞ் செல்வத்துட் செல்வம் பொருட் செல்வம்

யூரிய கண் ைமுன.