பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

1. l-

(இ ள்) செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடை ா ப யெ செல்வம்; பொருட்செல்வமாவது கீழாயினார் கண்ணும்

வாதலான் (எ-று).

இஃது, அருளின் நிலைமை கூறிற்று. 2

243. அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள் சேர்ந்த

வின்னா வுலகம் புகல்.

(இ-ள்) அருளைப் பொருந்தின நெஞ்சினையுடையவர்க்கு இருளைப் பொருந்தின நரக லோகம் புகுதலில்லை, (எ-று).

இது, நாகம் புகாரென்றது.

244. மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ய

தன்னுயி ரஞ்சும் வினை.

(இ-ள்) நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வாற்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருதலில்லையென்று சொல்லுவர், (எ-று). இது, தீமை வாராதென்றது. 4.

245. அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு

மல்லன்மா ஞாலங் கரி.

(இ-ள்) அருளுடையார்க்கு அல்லலில்லை; அதற்குச் சான்று காற்றியங்கப்பட்ட வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம், (எ-று).

அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார் மாட்டே காணப்படு மென்றது. என்னை அல்லல் வருவது சிலராலன்றே; யாவர்மாட்டும் அருள் செய்தலால் யாவரும் அல்லல் செய்வார் இன்றா மாதலான். 5

246. அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்

கிவ்வுலக மில்லாகி யாங்கு