பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

1. அருளுடைமை

(இ-ள்) அருள் இல்லாதார்க்கு மேலுலகத்து நுகர்ச்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் நுகர்ச்சி யில்லையானாற் போல, (எ-று).

இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது. 6

247. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி

னருளாதான் செய்ய மறம்.

(இ-ள்) தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற் போலும்; ஆராயின், அருளில்லாதான் செய்யும் அறமும், (எ-று) .

இஃது, அறஞ்செய்யவும் மாட்டானென்றது. 7

248. பொருணிங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணிங்கி

யல்லவை செய்தொழுகு வார்.

(இ-ள்) முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாத வற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியு முடையவ ரென்று சொல்லுவர் (எ-று). ஈண்டுமறவி-கற்றது மறத்தல். இது, பொருளில்லையாமென்றது. 8

249. பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா

ரற்றார்மற் றாத லரிது. (இ-ள்) பொருளில்லாதார் ஒருகாலத்தே பொருளுடைய ராதலும் கூடும்; அருளில்லாதார் கெட்டாரே பின்பு ஆக்கமுமுண் டாகாது, (எ-று).

இது, பொருளின்மையே யன்றி எல்லாக் கேடு முண்டா மென்றது. 9

250. வலியார்முற் றம்மை நினைக்கதாந் தம்மின்

மெலியார்மேற் செல்லு மிடத்து. (இ-ள்) தாம் தம்மின் மெலியார்மேலே வெகுண்டெழு மிடத்துத் தம்மின் வலியார்முன் தாம்நிற்கு நிலையை நினைக்க, (எ-று) .

இஃதருளுண்டாக்குமாறு கூறிற்று 10