பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

க௦௦

முன்னுரை 


தன்மானமின்மையையும் இப்பாடல் அடிகள் நன்கு உணர்த்துவனவாகும். இவற்றை அறிய அறிய நம் திருவள்ளுவப் பெரும் பேராசிரியரின் பெருமைப்பாடும் அருமைக் குணனும் திறமை முதிர்வும், பொதுமை நோக்கும், நேரிய வாழ்வும், சீரிய கொள்கையும் மிக நன்கு புலப்படும் என்க. எனவே, இத்தகு செம்மாப்பும், எவர்க்கும் தலைதாழாத் தன்மானமும் கொண்ட அவர் போல்வரால்தான் இத்தகு உயரிய பொதுமையற நூலை உலகநலன் நோக்கிச் செய்தற்கியலும் என்று உறுதியாய்க் கருதுக.

இனி, கழக இலக்கியப் பரப்பளவில் நாம் காண வேண்டிய, வறுமை புலமையைப் பிறரிடம் போய் மண்டியிடவும் அண்டி வாழவும் செய்த அவலச்சுவை நிறைந்த சில பாடற் பகுதிகளை அதுவும் புறநானூறு என்னும் வீறிலக்கியத்துள் உள்ள ஒருசில பாவடிகளை மட்டுமே இங்குக் காணலாம்.

புலவர்கள் பழுமரம் நோக்கிப் பறந்து சென்று பாடும் பறவைகளைப் போல அலைவுற்றிருந்த நிலை: 'பழுமரம் உள்ளிய பறவை போல’



-புறம்:370:11.

'பழுமரம் உள்ளிய பறவையின் . . . . புக்கு

- பொருந: 64; 7.

'பழுமரம் தேரும் பறவை போல'

- பெரும்பாண்: 20: 32.

'பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல



- மதுரைக் காஞ்சி. 576; 80.
கனிபொழி கானம் கிளையொடு உணீஇய 

துனை பறை நிவக்கும் புள்ளினம் மான .......................................

நன்னற் படர்ந்த கொள்கை யொடு



- மலைபடு: 56, 57, 64,

“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடிய என்னாது சுரம்பல கடிந்து வாடிய நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருந்தி ஒம்பாது உண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை”



- புறம்: 47; 1 - 6.