பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

க௦௪

முன்னுரை 


வேழ முகவை நல்குமதி தாழா ஈகைத் தகைவெய் யோயே’

(வெல்கெழு குட்டுவனை)
- புறம்: 369, 26 - 28.
(முகவை - பரிசில்)

இனி, கல்லாடனார் பாடியவை:

‘அரிசி யின்மையின் ஆரிடை நீந்தி

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

பணைமுக முகவைக்கு வந்தின் பெரும’

(நெடுஞ்செழியனை)
- புறம்: 371; 9, 19.

‘வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்பப்

புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்

தன்கடைத் தோன்றினும் இலனே பிறன்கடை

அகன்கண் தடாரிப் பாடுகேட் டருளி

வறன்யான் நீங்கல் வேண்டி என்னரை

நீல்நிறச் சிதாஅர் களைந்து

வெளியது உடீஇஎன் பசிகளைந் தோனே'

(அம்பர் கிழான் அருவந்தையை)
- புறம்: 385: 1 - 7.

‘முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப்

பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற

திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி

அரிய லார்கையர் உண்டுஇனி துவக்கும்

வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென

ஈங்குவந் திறுத்தவென் இரும்பேர் ஒக்கல்

தீர்கை விடுக்கும் பண்பில் முதுகுடி’

(பொறையாற்று கிழானை)
- புறம்: 391: 3 - 9.

இனி, இவ்வகையில் பெருஞ்சித்திரனார் பாடியவை.

‘பாடி வருநரும் பிறரும் கூடி

இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்திவண்

உள்ளி வந்தனென் யானே’

(குமணனை)
- புறம் 158; 18 - 20.

‘ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்கவென்

பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப

உயர்ந்தேந்து மருப்பின் கொல்களிறு பெறினும்