பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௦௯


இனி, அவ்வகையில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியவை.

'விருந்திறை நல்கும் நாடன் எங்கோன்
கழல்தொடீ ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு
கொன்விளங் குதியால் விசும்பி னானே'

(ஆய் அண்டிரனை - புறம்: 374; 15 - 18.


"யாவரும் இன்மையிற் கிணைப்பத் தாவது
பெருமழை கடற்பரந் தாஅங்கு யானும்
ஒருநின் உள்ளி வந்தனென் அதனால்
புலவர் புக்கில் ஆகி நிலவரை
நிலீஇயர் அத்தை நீயே

(ஆய் அண்டிரனை) - புறம்: 375 12 - 6.


இனி, அவ்வகையில் நன்னாகனார் பாடிவை:
இரப்பச் சிந்தியேன் நிரப்படு புனையின்
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
ஒருநாள்,
இரவலர் வரையா வள்ளியோன் கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாதுஎன் சிறுகிணைக் குரலே

(ஒய்மான் நல்லியக் கோடனை) - புறம் 376: 18 - 23,

'யானே பெறுகவன் தாள்நிழல் வாழ்க்கை
அவனே பெறுகளின் நாவிசை துவறல்'

(ஒய்மான் வில்லியாதனை) - புறம்: 379; 1 - 2.


"ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் க்ொண்டனவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத் தாற்றி இருந்தனம்'

(கரும்பனூர் கிழானை) - புறம்: 381: 1 - 4
துணையேம் பெரும