பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௧௦

முன்னுரை 


நெல்லென்னா பொன்னென்னா
கனற்றக்கொண்ட நறவென்னா
- - - - - மனையென்னா அவைபலவும்
யான்தண்டவும் தான்தண்டான்
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
மண்ணாணப் புகழ்வேட்டு
நீர்நாண நெய்வழங்கிப்
புரந்தோன் எந்தை . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
தின்ற நண்பல் ஊன்தோண்டவும்
வந்த வைகல் அல்லது
சென்ற வெல்லைச் செலவறி யேனே'

(கரும்பனூர் கிழானை) - புறம்: 384: 10 - 18; 21 - 24

இனி, அவ்வகையில் மாறோக்கத்து நப்பசலையாா் பாடியவை:

'பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன் றாகல் வேண்டும்'

(கிள்ளிவளவனை) - புறம்: 226: 3 - 4.
ஒண்பொறிச் சேவல் எடுப்பஏற் றெழுந்து
தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பாடுபல வாழ்த்தித்
தண்புகழ் ஏத்தினன் ஆக . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்என
ஒருவனை உடையேன் மன்னே யானே'</poem>
(கடுந்தேர் அவியனை) - புறம் 383: 1 - 5்; 22 - 23

இனி, அவ்வகையில் ஊன்பொதி பசுங்குடையார் பாடியவை:

'வளிமரற் றிரங்கிய கானம் பிற்படப்
பழுமரம் உள்ளிய பறவை போல