உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௧௧


. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வெந்திறல் வியன்களம் பொலிகென் றேத்தி
இருப்புமுகம் செறித்த வேந்தெழின் மருப்பின்
வரைமருண் முகவைக்கு வந்தனென் பெரும’

(இளஞ்சேட் சென்னியை) - புறம்: 370, 10 - 11; 19,21.

'எஞ்சா மரபின் வஞ்சி பாடி
எமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே'

(இளஞ்சேட் சென்னியை) - புறம்: 378; 9-12

இனி, இவ்வகையில் மதுரைக் குமரனார் பாடியவை:

‘இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ முதுவாய் இரவல'

(ஈர்ந்துர்க்கிழான் தோயன் மாறனை) - புறம்: 180: 8 - 9.

‘மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும உவந்துநனி பெரிதே'

(பரிசில் நீட்டித்த ::பெருந்திருமாவளவனை - புறம்: 197: 15 - 18.


'வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்
உள்ளம் ஒம்புமின் உயர்மொழிப் புலவீர்!
யானும்,
இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை
ஒருகண் மாக்கினை தெளிர்ப்ப வொற்றிப்
பாடிமிழ் முரசின் இயறேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக,
அகமலி யுவகையொடு அணுகல் வேண்டிக்
கொன்றுசினம் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி