திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனர்
௧௨௭
உண்மைக்கும் பொது அறவியலுக்கும் பொருந்துவனவாக உள்ளனவென்றால், அவை நம் பழந்தமிழ் மரபு நிலைகளினின்றும் அவை பொதிந்து அவற்றைப் பழஞ் சுவடிகளினின்றும் எடுத்து அவர்கள் மொழியில் வடிவப்படுத்திக் கொண்டனவேயாகும் என்க. • அன்பர்கள் அவற்றை நன்குணர்ந்து தேர்ந்து தெளிவார்களாக இதனாலன்றோ, 'மனோன்மணீயம்' யாத்த பேராசிரியர் சுந்தரனார்,
"வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி'
- என்று ஆரியநெறியினும் திருக்குறளை மேம்படுத்திப் பெருமைப்படுத்திக் கூறினார் என்க.
ஆரியவியல் நெறிமுறைகள் - தர்மங்கள் - அனைத்தும் 'மனுதர்மம்' போன்ற நெறிநூல்களிலேயே சொல்லப் பெற்றிருக்கின்றன. அவற்றிற்கும் அடிப்படை வேதங்களே ஆகும். எனவே, அனைத்துத் தர்மங்களுக்கும் வேதங்களே வழிகாட்டிகள். அந்த உண்மையும் அந்த நூல்களிலேயே கூறப் பெற்றுள்ளது. அவற்றை முறையாகப் பார்க்கலாம்.
'வேதங்களில் சொல்லப்பட்ட உண்மைகளே மனுவில்
- (மனு: 2: 7, 8)
'வேதத்திற்கு மாறுபட்ட தர்ம(அற) நூல்கள் நரகத்திற்கே
- மனு: (12; 95, 96)
'மக்கள், உலகம் முதலியவை, ஒழுக்கங்கள் - யாவும்
வேதத்தினாலேயே ஏற்பட்டிருக்கின்றன' {{Right|- மனு: (12; 97; 98)
இனி, வேதத்தில் அடிப்படையாக என்ன சொல்லப் பெற்றுள்ளது: வர்ணாச்ரமம், வர்ணவொழுக்கம். அஃதாவது பிரமன் என்னும் படைப்புக்
- "ரிக்வேதம் சதபத பிராமணத்தில் (111-2-1-24) அசுரர்களின் (தமிழர்களின்) மொழி, இலக்கிய நூல்களைத் தங்கள் மொழியில் பெயர்த்தெழுதிக் கொண்ட தேவர்கள் (ஆரியர்கள்) அவற்றைத் தாங்கள் வளர்த்த வேள்வி நெருப்பில் 'ஆகுதி' (படையல் பொருள்) ஆக இட்டு எரித்தது பற்றிய குறிப்பு வருகிறது. அந்நூல்கள் பனையோலைகளில் எழுதப்பெற்றிருந்தன.”
- மாலதி செண்டுகே.
(“The Civilized Demons – The Harappans in Rigveda – By Malati J. Shendge. (1977).