பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௩௦

முன்னுரை 


கீழ்வரும் சொலவகங்களால் (ஸ்லோகங்களால்) காண்க: (வடமொழி கலந்த மொழிபெயர்ப்பு தமிழ்படுத்தப் பெறவில்லை)

'வேதத்தை நிந்திப்பவன் தெய்வமில்லை என்று சொல்பவன்'அஃதாவது, அவன் ('நாஸ்திகன்') 'நாஸ்திகோ வேத நிந்தக'
- மனு: 21.

'வேதத்தில் சொல்லப் பெற்றவைதாம் தர்மம்'
- மனு:2:13.

'வேதத்தில் மாறுபடச் சொல்லியிருந்தாலும் அது தர்மமே'

- மனு:2:14.

'வேதங்களே பஞ்ச பூதங்களைக் காக்கின்றன. வேதம் அநாதி வேத மந்திரங்களே ஹோமங்களுடன் சூரியனையடைந்து மழை பொழிவிக்கின்றன. அதனால் பருவமும் அதனால் உணவும் அதனால் மக்களும் உண்டாகிறார்கள்'

- மனு: 12, 99.

'சிரார்த்தம், யாகம், தானம் இவற்றிற்கு அடிப்படை வேதங்களே'

- மனு: 12; 94

'வேதத்தை அறிந்தவனே (பிராமணன்) பாபத்தைப் போக்க வல்லவன்'

- மனு: 12: 101.

'வேதத்தை அறிந்தவன் (அஃதாவது பிராமணன்) எந்த ஆச்சாரிய (அஃதாவது பிரமசாரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்யாசம்) ஒழுக்கம்முள்ளவனாக இருந்தாலும் அவனே இம்மைக்கு இப்பிறவிக்கு அதிகாரி'

- மனு:12, 102.

'வேதத்தை அறிந்தவனே (பிராமணனே) எல்லாரிலும் உயர்ந்தவன்'.

- மனு: 12; 103.

'வேதம், ஸ்மிருதிகள் (ஆரிய தர்ம நூல்கள்) இவற்றை மீமாம்ஸை நியாயத்தால் கேட்பவனே தர்மத்தை அறிபவன்'

- மனு: 12:06, 109.

'இதில் (அஃதாவது மனுதர்ம சாஸ்திரத்தில்) எல்லா தர்மமும் சொல்லப்படவில்லை. சொல்லப்பட்டவையும் கால, இட, வேறுபாட்டால் ஐயத்திற்குரியவையானால், அது தொடர்பாக, வேதமறிந்த பிராமணர்கள் எந்தத் தர்மத்தை ஏற்படுத்துவார்களோ அதுவே நிச்சயமான தர்மம்'

- மனு: 12; 108.