பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௬௪

முன்னுரை 


--- பதிற்: 18, 9 - 12.

'மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்
அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறல் மூதூர்த் தந்து, பிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்தாள்
இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதன்'

-- பதிகம்: பதிற்: 2 ஆம் பத்து.

1 - – 13.


'சினனே, காமம், கழிகண் ணோட்டம்,
அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் வுலகத்து
அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்.
தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து
கடலும் வானமும் பலடயம் உதவ
பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது
மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணை பிரியாது, பாத்துண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!

--- பதிற்: 22 1 - 11.

தொல்நிலைச் சிறப்பின் நின்ன்ரிழல் வாழ்நர்க்குக்
கோடற வைத்த கோடாக் கொள்கையும்
நன்றுபெரிது உடையையால் நீயே
வெந்திறல் வேந்தேஇவ் வுலகத் தோர்க்கே'

--- பதிற்: 37-10 - 14.

'உலகத் தோரே பலர்மன் செல்வர்