பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௬௭


-- மதுரை: 432.


'அறம் செய்து அருளுடையீர் ஆற்ற ஆகுமின்'

--- நாலடி 7:3.

'உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறம்'

--- நாலடி 10, 1 - 2.

'மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்'

--- நாலடி 19: 1 -2.

'புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை'

--- நாலடி 29, 1 - 2.

'ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ, அறம்மறந்து
போவாம்நாம் என்னா புலைநெஞ்சே - ஓவாது
நின்றுளுற்றி வாழ்தி'

--- நாலடி 32, 1 - 3.

'ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்'

--- நாலடி 36 3. -4.

'எங்கண் இளையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ண ராயினும் தகவில கண்டக்கால்
வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு'

--- பழமொழி. 322

- தண்டனைகளைப் பொறுத்த மட்டில், என்ன குற்றம் செய்தாலும் எத்தகைய கொடுவினைகளைச் செய்தாலும் பிராமணரைத் தண்டிக்கக் கூடாது என்றே ஆரிய நெறி கூறுகிறது. அந்நிலைகளையே அரசனும் கடைப்பிடிக்க ஆரிய தர்மம் வற்புறுத்துகிறது. இவை பற்றி முன்னரே பல எடுத்துக்காட்டுகள் கூறப்பெற்றுள்ளன. எனவே, இந்த வகையில் வடவாரிய வர்ணாச்சிரம தர்ம நூல்களைத் தழுவித்தான் திருவள்ளுவர் நூல் செய்தார் என்று கூறுவது எத்துணை அறியாமை நிறைந்தது, கொடுமையானது, முன்னுக்குப் பின் முரணானது என்று உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

'திருவள்ளுவர் ஆரியக் கொள்கைகள் தமிழ் நாட்டில் புகுந்த போது அவற்றை ஏற்காமல் மறுத்தவர், வெறுத்தவர் என்பதும் தமிழ்க்குடி மக்கள் ஆரியக் கொள்கைகளால் அறிவிழந்துவிடாமல் (நெறியிழந்து