பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௬௮

முன்னுரை 


விடாமல்) அறிவு நிலைபெற்று விளங்கவே திருக்குறளைச் செய்தார் என்பதும் எம் கொள்கையும் பெருந்துணிபுமாகும் (இறையனார், 'திருக்குறள் ஆராய்ச்சி' (1949) பக்:43,)

'இவர் கொண்ட கொள்கைகள் பண்டைத் தமிழர் கண்ட செந்நெறியின் தெளிந்த கொள்கைளேயாகும். இவை இப்பொழுது கூறப்படும் சமய மதங்கள் யாவும் தோன்றுமுன் அறிவும், அன்பும், அருளும் அமைந்து நிறைந்த பண்டைத்தமிழ்ப் பேரறிஞர்களால் கண்டு கைக்கொண்டு பயன்பெற்ற தமிழர்க்குரிய தனிப் பண்பாடுகளாகும்'

(மேற்படி நூல்: பக்: 48)

- இனி, குமுகாய (சமுதாய) அமைப்பிலும் உடைமைக் கொள்கையிலும் ஆரியவியல் கோட்பாடு எவ்வாறு கையாளப் பெற்றது என்பதையும் நாம் அம் மனுநூலைக் கொண்டே ஒருவாறு அறிந்து கொள்ளலாம்.

'பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இவர்கள் தம்தம் வருணங்களுக்குக் கீழான மற்ற வருணங்களிலும், சூத்திரன் தன் வருணத்தில் மட்டும், மணம் செய்துகொள்ளலாம்' -- மனு: 3. -13;


'பிராமணன் உயர்ந்த குலத்தாரோடுதான் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்' -- மனு: 4 -244, 245.


'அட்டை, கன்று, வண்டு ஆகியவை, இரத்தம் பால், தேன் இவற்றை உறிஞ்சுவது போல் அரசன் குடிகளிடம் வரி வாங்க வேண்டும்' -- மனு 7 - 131.


'பிராமணனிடம் அரசன் தீர்வை பெறக்கூடாது. அவன் பசியினால் துன்பப்படும்படி வைக்கக் கூடாது?' -- மனு 7 - 133.


'பிராமணனிடத்தில் தோணிக்காரன் கட்டணம் வாங்கக் கூடாது'. -- மனு: 8 - 40.


'பிராமணன் சூத்திரனிடம் கூலி கொடுக்காமல் வேலை வாங்கலாம்'. -- மனு: 8 - 413, 414

- இவற்றாலும் இன்னும் பிற நடைமுறைகளாலும் குடிமக்களிடம் அதுவும் பிராமணக் குடிகளிடம் அரசன் வரிகள் தண்டுவதில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது நன்கு புலப்படுத்தப்பெற்றுள்ளது,