உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௭௪

முன்னுரை 


வயதுப் பெண்ணையும், 30 வயது நிறைந்தவன் 12 வயதுப் பெண்ணையும் மணக்கலாம்.'

‘பெண்ணைக் கட்டுக் காவலுடன் கருத்தாய்ப் பேணாவிடில் வர்ணாச்சிரம தர்மம் கெட்டுப் போகும். அவளின் கூடாவொழுக்கத்தால் சூலத்தை அழித்து விடுவாள். அவளால் பிறந்த குலமும் கெடும்; புகுந்த குலமும் கெட்டுவிடும்.’

'எனவே பெண்களை விபசாரம் செய்யாதபடி கணவர்கள் காப்பாற்ற வேண்டும். அதுவே அவர்களின் தலையாய கடமையாகும்.'

'கணவன், மனைவியை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி அவள் மனம் வேறிடத்தில் செல்லாதபடி செய்ய வேண்டும்.’

‘தனது ஒழுக்கம், குலம், சந்ததி, நற்கருமங்கள் ஆகியவற்றை முறையாகக் காப்பது போலவே மனைவியைக் காப்பது கடன்.’

‘இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் மக்கள் பெண்களுக்குக் காவல் ஆவர். பெண்களை எப்போதும் தனித்திருக்கும்படி விடவே கூடாது.’

‘பெண் பிறவியைத் துய்மைப்படுத்தும் செயல்பாடுகள் எதுவும் இல்லை. மந்திரம் எதுவும் இல்லை. பெண் பொய்யைப் போலவே அழுக்குடையவள்.’

'கணவன் சூதாடி, குடிகாரன், நோயாளி என இகழ்ந்து எந்தப் பெண்ணும் அவனுக்குப் பணிவிடை செய்யாமல் இருக்கக் கூடாது.’

‘என் தாய் கற்பிழந்தவள் என்றே ஒவ்வொரு மகனும் கருத வேண்டும்.’

‘பெண்கள் ஆடவர்களின் அழகு, பருவம், செல்வம் இவற்றை விரும்பாமல் ஆண் தன்மையை மட்டுமே விரும்புகிறார்கள்.’

'பெண்களுக்குக் கற்பும், மனமும், நட்பும் இயற்கையிலேயே நிலையானவை அல்ல. சில தீய குணங்கள் பெண்களுக்காகவே கற்பிக்கப் பெற்றன.’

பெண்கள் தம்மிச்சையாகச் சென்று கூத்து, பாட்டு நிகழும் அரங்குகளில் மகிழ்வர். குடிக்கக் கூடாது என்று விதிக்கப்பெற்ற திருமண நாள் முதலிய நல்ல நாள்களிலும் குடிப்பவர்.

'மகளிர் அங்குமிங்கும் சும்மா போதல் வருதல், அயலார் வீடுகளில் போய் அமர்தல், கண்டவிடங்களில் தூங்குதல், கணவனை விட்டுத் தனியே வேற்றுார் செல்லுதல், தீயவரின் உறவு, கள்ளுண்ணுதல் இவையெல்லாம் பழிகள் தருவன.’