பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௭௬

முன்னுரை 


இரண்டாம் பிள்ளையையும் பெறலாம். முதல் பிள்ளை குலத்துக்கேற்ற பிள்ளையாய் இல்லாதபோது இரண்டாவது பெறலாம்.’

'கணவன் இறந்த பின் எந்தப் பெண்ணையும் இன்னொருவர் கூட அனுமதிக்கக் கூடாது.’

'பிராமண குலத்தில், பிள்ளையற்றபோதும், விதவையானவளை யாரோடும் கூடிச் சந்ததி பெற அனுமதிக்கக் கூடாது. விதவா விவாகம் ஒரு திருமணமாகக் குறிப்பிடப்படவில்லை.’

'அண்ணன் தம்பி இருவரும் பிள்ளையில்லாத பொழுது தம் மனைவியர்களை மாற்றிப் புணரலாம்.'

'விதவைக்குப் பிள்ளை வேண்டின் அவள் பிள்ளையுண்டாகத் தன் கணவனின் தம்பி அல்லது அண்ணனுடன் சேர்ந்து பிள்ளை பெறலாம்.’

பெண்குறியைவிட ஆண்குறியே உயர்ந்தது; சிறந்தது. நிலத்தை விட வித்தே சிறந்தது.’

'அறிவுள்ளவன் தன் வித்தைத் தன் மனைவியிடத்தில்தான் விதைக்க வேண்டும்.’

'விபசாரக் குற்றமுள்ள பெண்ணை மணந்துகொள்ள நேர்ந்தால் அம்மி மிதிப்பதற்கு முன் அவளை விலக்க வேண்டும்.’

'கணவன் இல்லாத பொழுது மனைவி ஆடை, ஆபரணங்களை நீக்க வேண்டும்'

'அக்காலத்து வருமானமில்லா விட்டால், கோலமிடுதல், இராட்டை நூற்றல் முதலிய கற்புக் கெடாத தொழில்களைச் செய்து வருமானம் செய்து கொள்ளலாம்; வாழ்க்கை நடத்தலாம்.’

‘பெண் பூப்பெய்தி மூன்றாண்டுக்குள் தந்தை மணம் செய்து தராவிடில் தானாகவே ஒருவனைத் தேடி மணந்து கொள்ளலாம்.’

'மனைவி தெய்வத்தால் கொடுக்கப் பெறுகிறவள் என்று வேதம் சொல்கிறது.’

'விதவை தன் கொழுநனை மணந்து கொள்ளலாம்.’ ‘புத்திரர்களுக்குள்ள அதிகாரம் பெண்களுக்கில்லை.’ 'சூத்திரனுக்குப் பிற சாதிப் பெண்கள் மனைவியராகார்.’

‘தந்தை ‘புத்’ என்னும் நரகத்தில் போய்ச் சேராமல் காப்பதால் மகனுக்கு