பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௮௪

முன்னுரை 


பயன்பட்டு வருதல் உணர்ந்து மகிழ்தற்குரியது என்க.)

'எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான்அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்'

---தொல் 1159


(உள்ளத்தால், உணர்வால், உடலால் வரும் இன்பநிலைகள் அனைத்தும், அனைத்து உயிர்களுக்குமே பொதுவாகும். அஃது ஆரியவியல் போல் பிராமணர்க்கோ அல்லது ஆண்களுக்கு மட்டுமோ உரியதன்று என்று இலக்கணப்படுத்திய தமிழியல் பொதுநெறியை இதன் வழி நன்கு உணர்க)

'ஒருதலை உரிமை வேண்டியும், மகடூஉப்
பிரிதல் அச்சம் உண்மை யானும்
அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்கும்.என்று
அஞ்ச வந்த ஆங்கிரு வகையிலும்
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
போக்கும் வரைவும் மனைவிக் கண் தோன்றும்'

---தொல் 1171


இதில், தலைவி அவளின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும்,தன்னைத் தலைவன் பிரிந்து விடுவானோ அல்லது கைவிட்டு விடுவானோ என்னும் அச்சத்தாலும், தான் தனியே யிருப்பின் அவன் தொடர்பு வெளிப் பட்டு ஊர் தூற்றுவதும் பழிப்பதும் நேருமே என்பதாலும், அவன் பொருளிட்டும் நோக்கோடு செல்லுமிடத்தும்கூட, தான் விரும்பிய அல்லது காதலித்த ஒருவனொடு வெளியூர்க்குப் போவதும் அங்கேயே அவனை மணந்து கொள்வதும் நிகழும் என்று கூறப்பெற்றிருப்பது, தமிழியல் பெண்களுக்குத் தந்த உரிமையைக் காட்டுவதாகும்,)

'மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய'

---தொல் 1173


(இதில், படுக்கையறையிலும் பெண்ணுக்கு உரிமையுண்டு என்று கூறப்பெறுவது உற்று நோக்கத் தக்கது. இதுதான் தமிழியல். இங்கு அவள் உரிமை மட்டும் நிலைநாட்டப் பெறவில்லை. ஆணை அடிமையும் கொள்கிறாள். 'காமம் காரணமாகவே, இங்கே ஆண் பணிந்து நிற்றல் சொல்லப் பெறுகிறதோ' எனில் அஃதன்று, பிறவிடங்களில் சமநிலை கொண்டவள். இங்கு அவள் உயர்ந்து நிற்பதும், ஆண் பணிந்து நிற்பதும் நிகழ்கிறதே தவிர, ஆரியவியலில் கூறப்பெறுவதுபோல், பெண் எங்கும் ஆணுக்கு