பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௮௫


அடிமையே; அவள் படுக்கையறைப் புதுமையே என்பது தமிழியலில் இல்லை என்று உணர்க)

'நிகழ்தகை மருங்கின வேட்கை மிகுதியில்
புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே'

---தொல் 1174

(இதில் காமவுணர்வின் மிகுதியாலும், அது ஒருவரால் ஒருவர்க்கு நிறைவூட்டப் பெறுவதாலும், இருவரும் சமநிலை நின்று, ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாராட்டிக் கூறிக்கொள்ளுதல் செய்வார். அதைத் தவிரார் என்று உரைக்கப்பெற்றதென்க. இஃது ஆரியவியலில் காணப்பெறாத நிலை என்று உணர்க)

'கிழவோள், பிறள்குணம் இவையெனக் கூறிக்
கிழவோன் குறிப்பினை உணர்தற்கும உரியன்'

---தொல் 1180

(இதில் வேறு பெண்ணை விரும்பும் தன் கணவனைக் கண்டித்துக் கூறுதற்கும், அவனைக் கடிந்து திருத்துதற்கும் மனைவிக்கு உரிமையுண்டு என்று கூறப்பெறுவதால், பெண்ணுரிமைக் கோட்பாடு தமிழியலில் உண்டு என்க.)

இனி, திருக்குறளில் பெண்மைக்குப் பெருமை தரும் கூற்றுகளைக் காண்போம்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின் -54

(இதில், பெண்ணின் உள்ள உறுதியே கற்பென்று கூறப் பெறுகிறது. உள்ள உறுதி ஒருமை உள்ளம், கடைப்பிடி, இல்லற இணைவு, மனைமாண்பு, தகைசான்ற சொற்காத்தல், நிறைகாத்தல், புகழ் பெறல் முதலியவை உள்ளடங்கியது ஆரியவியலில் பிறன் மனைவியை விரும்பலாம் என்று கூறப்பெற்றுள்ளது. (மனுநூல் (5-63) எடுத்துக்காட்டுப் பகுதியுள் காண்க) ஆனால், தமிழியலில் பிறனில் விழையாமை தெளிவாகச் சுட்டப் பெறுகிறது. பிறனில் விழைவாரைத் திருக்குறள்

பேதை (141), அறன் கடை நின்றான் (142), விளிந்தான் (செத்தான்நடைப்பிணம்)(143), எந்தச் சிறப்பும் இல்லாதவன் (144),பழியுடையவன் (145), பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நான்கும் உடையவன் (146), அறத்திற்கு மாறானவன் (147), ஆண்மைக்குறையுடையவன், ஒழுங்கில் லாதவன் (148),நலங்கெட்டவன் (149), அறமில்லாதவன் (150) பரத்தன் (1311)