பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௯௧


கூறுகளிலும் முதலாகவும் முற்றாகவும் வேண்டுவது ஆண்மைக்கூறே. பிற அனைத்து இயற்கையமைப்பு நிலைகளும், செயற்கைத் தகுதி முயற்சி நிலைகளும், அவ் வாண்மைக் கூறிற்குப் பின் வைத்து எண்ணப் பெறுபவையே. ஓர் ஆணுக்குள்ள ஆண்மைக் கூறை வைத்தே அவன் ஆண் என்று தமிழில் சொல்லப் பெறுகிறான் ஆடவன் என்னும் சொல்லிலும் ஆண் என்னும் பகுதியே முன் நிற்கிறது.

இவ்வாண்மைக் கூறுதான் ஒரு பெண்ணை அவன் பால் ஈர்க்கிறது; இணைக்கிறது: அவனுடன் ஈடுபடச் செய்கிறது; அவளின் பெண்மையை நிறைவுபெறச் செய்கிறது; அதன்வழி உயிரினத்தை வளர்க்கிறது; பெருக்குகிறது; இவ்வுலகில் நிலைப்பெறச் செய்கிறது. அவனுக்குள்ள பிற இயற்கை புணர்வுத் தகுதிகளாகிய அன்பு, பண்பு, ஒழுக்கம், அறிவு, திறமை, செயல் முதலிய அனைத்தும் செயற்கையுணர்வுத் தகுதிகளாகிய கல்வி, தொழில், பொருள், பெருமை, புகழ் முதலிய அனைத்தும் அவனுடைய ஆண்மைக் கூறுக்கு உற்ற துணையுணர்வுகளே. இவற்றால் அவன் ஆண்மை மிளிர்ந்து தோன்றி, அவன் உயிரியக்கத் தன்மை செழிப்பாகிறது. அவன் வாழ்வியலுக்கு அவை மெருகு தருகின்றன. அவனைப் பிறர் மதிக்கும்படி, ஏற்றுக் கொள்ளும்படி செய்து, அவன் இருந்தான் என்னும் நிலையில், புகழ் பெற வைக்கின்றன. மற்றபடி அவனின் எதிர்ப்பாலாகிய ஒரு பெண்ணுக்கு, அவனிடத்திலிருந்து கிடைக்க வேண்டிய முதல் தேவை அவனிடத்துள்ள ஆண்மையே. ஆண்மைதான் அவளை அவனிடத்து நிலை கொள்ளச் செய்கிறது. அவனை மதித்துப் போற்றி நடக்கச் செய்கிறது. அவ்வாண்மைதான் அவனைத் துணிவுள்ளவனாகவும், வீரனாகவும், செயல்திறம் உள் ளவனாகவும் வளர்த்தெடுக்கிறது. அவ்வாண்மை ஏதோ ஒரு நிலையில் குறைவுரின், அவனைச் சார்ந்து இயங்கும் பெண், உடலால் நிறைவின்மையும், பின் உள்ளத்தால் நெகிழ்ச்சியும், அதன் பின் அறிவால் விளர்ச்சியும், அதன் செயலால் வேறுபாடும், அதன் பின் வாழ்வியலால் மாறுபாடும் அடைகிறாள். இவ்வேறுபாடும், மாறுபாடும் அவனிடமிருந்து அவளை விலகிநிற்கச் செய்கிறது. பின் அவளை வேறோர் ஆண்மையன் மீது நாட்டங் கொள்ளச் செய்கிறது. அந்நாட்டம், சூழலாலும், வாய்ப்பாலும் பிறனின் அழுத்த நடவடிக்கையாலும், அவளைப் படிப்படியாய் அறிவாலும் பின் உள்ளவுணர்வாலும், அதன்பின் அன்பாலும் அல்லது பரிவாலும் பின்னர்ச் செயலாலும், இறுதியில் உடலாலும் அவனோடு நெருங்கச் செய்கிறது. பிறகு தன்னை அவனோடு பின்னிப் பிணைத்து அவனுக்காகவே அவளை இயங்கச் செய்கிறது. இவ்வகையில் அவளுக்கு அவள் பெற்றோராலும், மரபாலும்கற்பிக்கப் பெற்ற, அல்லது இயல்பாகவே வலுப்பெற்று நின்ற தன்னொழுக்கம் சிதைகிறது. இவ்வாறு சிதைவதையே கற்பு கெடுதல் என்றும், சிதையாமல் உறுதியுடன் நின்று ஒழுகுவதையே கற்பு என்றும் தமிழ்