பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௯௨

முன்னுரை 


முன்னோர், சான்றோர் சொல்லிச் சென்றார்கள். உறவால் ஒரு பெண் ஒருவனுக்கும், உடலால் அவள் இன்னொருவனுக்குமாக வாழ்வதை எவருமே நல்லதென்றோ, சரியென்றோ ஏற்றுக் கொள்வதில்லை. இது மனவியலையும் வாழ்வியலையும் தாக்கமுறச் செய்யும் செயல் ஆகையால், இதனை, ஒரு பெண்ணுக்குரிய நெறியாகவும் ஆக்கினர். இன்றும் கூட இந்நிலையைத் தவறாக உளவியல், வாழ்வியல் அறிஞர்கள் மதிப்பிடு வதில்லை. உயர்மனப் பெண்டிரும் கூட இவ்வுணர்வை ஒப்பவே செய்வர். இவ்வுணர்வைத் திருவள்ளுவர் -திண்மை, மனவுறுதி என்று போற்றி உரைத்தார். இந்தக் கற்புநிலை ஆணுக்கும் இருக்க வேண்டுவதை அவர் வலியுறுத் தவும் செய்கிறார். பெருமை அதிகாரத்துள் வரும்

'ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான்
கொண் டொழுகின் உண்டு' -974.

என்னும் குறளை ஓர்க.

பெரும்பாலும் ஓர் ஆணுக்கோ, பெண்ணுக்கோ இயற்கையாகவோ செயற்கையாகவோ உள்ள அத்தனை உளவியல், அறிவியல், உடலியல், உணர்வியல் முதலிய கூறுகள் அனைத்துமே சிறந்து இருப்பதில்லை. புறத்தாலும் அகத்தாலும் ஆளுக்கு ஆள் அவை வேறுபடவும், ஏற்றத் தாழ்வாக இருக்கவுமே செய்கின்றன. எனவே ஒரு பெண்மைக்குத் தேவையான ஆண்மையும் ஓர் ஆண்மைக்குத் தேவையான பெண்மையும் கூட, முழு அளவில் அமைந்து விடுவதில்லை. பிறவற்றில் உள்ள வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் அமைந்த குறைபாடுகளையும், பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளாமல் அவரவர்க்குற்ற நிறை குறைகளை நிரவலாக்கிக் கொண்டு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்று எண்ணி நிறைவு பெறுதல் வேண்டும். அதுவன்றி, சூழ்நிலைகளை எதிர்த்து நில்லாமல், அறிவால் அவற்றை வெல்லாமல், அவற்றுக்குப் பணிந்து, திரிந்து அவற்றுக் கேற்ப ஒருவர் மாறிக் கொண்டே போவது நிலையான வாழ்க்கை வெற்றியைத் தருவதில்லை. நிறைவையும் உண்டாக்குவதில்லை.

எனவே, ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்பொழுக்கம் தேவையென்பதை உணர்தல் வேண்டும். இன்னும் சொன்னால் அது பெண்ணுக்கு மிகத் தேவை என்பதையும நாம் அழுத்தி அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆகவே கற்புநிலை பெண்ணின் அடிமை நிலையன்று.

இனி, இறுதியாக நாம் இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அது தமிழியல் கற்புநிலை என்பது வேறு; ஆரியவியலில் கற்பு