பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௯௪

முன்னுரை 


கற்பிறை கொண்ட கமழும் சுடர்நுதல்' - பதிற் 70:14-15

'மீனொடு புரையும் கற்பின் வாணுதல் அரிவை' - பதிற்: 89:19

'அடங்கிய கொள்கை ஆறிய கற்பின் ..ஒண்டொடி' பதிற்: 90:49

'மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்' - பரி 5:46

'நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்' - அகம் 91:24

'மனைமாண் கற்பின் வாணுதல்' - அகம் 33:2

'வணங்குறு கற்பின் மடங்கொள' - அகம் 73:5

'கற்பின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை ஆக' - அகம்: 86:13-14

'மாசில் கற்பின் அணங்குசால் அரிவை' - அகம்: 114:13

'உவர்நீங்கு கற்பின் எம்உயிர்' - அகம்: 136:19

'கடவுள் கற்பொடு குடிக்கு விளக்காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டி’

- அகம்184:1-3

'ஆன்ற கற்பின் சான்ற பெரியள்' - அகம் 198:12

'முல்லை சான்ற கற்பின் மெல்லியள் குறுமகள்' - அகம் 274:13

'கடவுள் கற்பின் மடவோள்' - அகம்: 314:15

'செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ' - புறம் 3:4

'வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை' - புறம் 122.8

'பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்' - புறம்: 163:2

'மறம் கடிந்த அருங்கற்பின் நின்துணைவியர்' - புறம்: 166:13

'நாணல தில்லாக் கற்பின் வாணுதல்' புறம்: 196:13,

'கடவுள் சான்ற கற்பின் சேயிழை' - புறம்: 198:3

'அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை' - புறம்: 249:10

'கற்புடை மடந்தை தற்புறம் புல்ல' புறம் 383:13

'நிலைஇய கற்பினாள்' - கலி: 2.13