பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௧௮

முன்னுரை 


நன்மை தீமைகள், ஏற்புகள், தவிர்ப்புகள், உடன்பாடுகள், முரண்பாடுகள் அவற்றால் ஏற்படும் நட்புணர்வுகள், பகையுணர்வுகள், ஆளுமைகள், வல்லாளுமைகள், இணக்கங்கள், பிணக்கங்கள், உயர்வுகள், தாழ்வுகள் இன்பங்கள், துன்பதுயரங்கள் முதலிய அத்தனையும் பற்றிய உணர்வெழுச்சிகள், அவற்றின் தாக்கங்கள், நோக்கங்கள், கொள்கை, கோட்பாடுகள் முதலிய அத்தனை உயிர்க்கூறுகளையும் அவற்றின் முடிவுகளையும் அழிவு, தோற்றங்களையும் பற்றிய மேலோட்டமான வெளிப்பாட்டுத் தோற்றங்கள், உள்ளோடி நிற்கும் அழுத்தமான மூல மெய்ப்பொருள் உண்மைகள், இறுதி இருப்புகள் ஆகியவை பற்றியெல்லாம் விரிவு விளக்கங்களெல்லாம், ஒருங்கி ணைத்துக் கூறும் ஓர் ஒப்புயர்வற்ற ஒருமை நூலாக இது விளங்குகிறது. ஒளிகாட்டி நிற்கிறது.

இனி, பொதுவாக, ஒரு நூலின் கண், அதன் ஆசிரியர் சிந்தித்த நினைத்த அவருக்குச் சரியென்றும் தவறென்றும் பட்ட கருத்துகளை மட்டுந்தாம் நாம் அறிந்து கொள்ளமுடியும். ஆனால், இதில், இவ்வுலகின் கண் வந்து, இருந்து, வாழ்ந்து போகின்ற அனைத்து நிலையினரும், சிந்தித்து, உணர்ந்து, செயல்பட்டுப் போகின்ற அத்தனைக் கருத்துகளும் - செறிந்துள்ள தன்மைதான், இதன் அழியாத நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

இத் திருக்குறளை ஆழ்ந்து கற்கின்ற ஒருவன், இதன் ஆசிரியர் வழி, அவர் கண்களால், தன்னையே பார்க்கின்றான்; தான் சார்ந்துள்ள இம் மாபெரும் மக்கள் இனத்தைப் பார்க்கின்றான்; இவ்வுலகத்தைப் பார்க் கின்றான். இறுதியில் தன் வரவையும், செலவையும், இருப்பையும் தானே, இத் திருக்குறள் துலைக்கோலின் (தராசின்) வழி, மதிப்பிட்டுவிட்டுப் போகின்றான்.

இவ் வுண்மைக் கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறி இதனை மெய்ப் பிப்போம். இதில் வரும்,

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்
என்னும் ஏமப் புணையைச் சுடும் 306.

- என்பதில் மிகு உண்மையான மூன்று கருத்துகள் கூறப்பெற்றுள்ளன. அவை:

1. சினம் என்னும் தீப் போன்ற மனவெழுச்சியின் மிகையுணர்வு வெளிப்பாடு, அனைவரையும் கொல்லும் தன்மையது.

2. அது, முதலில், தன் அண்டை அயலில், தன்னோடு தொடர்பு