பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௨௦

முன்னுரை 



இவை போலவே, குறளில் வரும் இந்திரன் (25),திருமகள் (179),(519, (617), (920), மூதேவி முகடி (617), கூற்று எமன் (269), (326), (894), (1083). (1085), திருமால் (1103)முதலிய தெய்வங்கள் சார்ந்த தொன்மக் கதைகளில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கலாம்; அல்லது அவ்வகை நம்பிக்கை கொண்ட அக்கால மக்களுக்கு தெரிந்தவை கூறித் தெரியாதவை உணர்த்தல் என்னும் உத்திக்குத் தக அவர் அதைக் கையாண்டிருக்கலாம். இந்திரனை நம்புவது, வேதவியற் கொள்கையினரைப்போல் சமண மதக் கொள்கையினருக்கும் உடன்பாடான ஒன்றே. அக் கொள்கையினைத் தழுவியவர் களுக்காகவும் அவர் அவற்றை எடுத்துக் காட்டியிருக்கலாம். ஆனாலும் அவற்றின் வழியாக அவர் கூறும் கருத்துகளுக்குப் பழுதேதும் காணப் பெறல் இல்லை என்க.

இவ்விடத்தில் இறையுண்மையும் ஒரு நம்பிக்கையின்பாற்பட்ட கருத்து தானே என்பார் ஒன்றைக் கவனித்தல் வேண்டும். இறையுண்மை மெய்யறி வான் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு நம்பிக்கை அதிற் பிழையில்லை. உயிர்க் கொள்கை போன்றது. அது அறிவியலுக்கு இற்றைப் புலனாகாதது எனினும், பிற்காலத்து அதற்கும் உட்படுவது. ஆனால், இந்திரன் உண்மைக் கொள்கை மெய்யறிவியலுக்கு உட்படுவதன்று. வெறும் கற்பனையின் பாற்பட்டுக் கருத்து வலிவுக்காகத் தோன்றிய நம்பிக்கையே அது. ஆனால், திருவள்ளுவரும் இற்றை அறிவியல் விரிவை அறிந்திருக்க வாய்ப்பின்றிப் போனாதால், இந்திரக் கற்பனை போலும் மெய்யறிவியலுக்குப் பொருந்தாத கற்பனை நம்பிக்கைக்கு இடனமைத்துக் கொண்டவராகலாம், என்க.

திருக்குறளில் உண்மைகள் ஐந்து வகைகளாகச் சொல்லப்பெறுகின்றன. அவை அறிவுண்மைகள், மனவுண்மைகள், செயலுண்மைகள், பொருளுண்மைகள், வாழ்வியலுண்மைகள் என்பனவாகும்.

அறிவுண்மைகள் என்பவை, ஒருவன் தன் அறிவுணர்வால் அறியப் பெறும் உண்மை நிலைகளாகும். அவற்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

அன்பும் அறனும் (45), இன்சொல் இனிதீன்றல் (99), ஏதிலார் குற்றம் போல் (190), செல்லாவிடத்து (302), காதல காதல் (440), தேரான் தெளிவும் (310). கடிதோச்சி (562), செய்க பொருளை (759), காணாதான் (849), களித்தானை (929) போன்றவை.

மனவுண்மைகள் என்பவை, ஒருவன் தன் மனவுணர்வால் அறியப்பெறும் உண்மை நிலைகளாகும் அவற்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு: