பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௩௪

முன்னுரை 


விரியும் ஆகலின், அவ்வகல்வு அஞ்சி, இதனை இவ்வளவில் நிறுத்தி மேலே செல்வாம்.

இனி, இவர் இவ்வகைக் கருத்துகளை இவ்வாறாகக் கூறுகையில், அவை மக்களுக்கு நன்கு விளங்குதல் பொருட்டாக, அவற்றுக்கு ஏற்றவாறும், பொருந்தும் வகையிலும் எல்லார்க்கும் தெரிந்த உவமைகளை எடுத்துக் கூறுவது, வேறெவரும், எந்நூலிலும் கையாளாத திறன் கொண்டதாகும் என்பது இந்நூலின் தனிச் சிறப்பாகும். இதற்கெடுத்துக் காட்டாகச் சில குறட்பாக்களை இங்குக் காட்டுவோம்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. -90

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி -118

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. -215

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கில் கரியார் உடைத்து -277

கனைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலால் கொளல் -279

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளி தற்று -332

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு -338

தொட்டனைத் துறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு -396

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து -490

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. -495

(இவற்றின் பொருட் சிறப்பையெல்லாம் நூலுள் காண்க)

இவ்வாறு அவர் எடுத்துக் காட்டும் எளிய உவமைகள் கற்பனையால் அன்றிக் காட்சிக்குரிய வாகவும், கூறவந்த கருத்துகளை நன்கு விளக்கு