பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௪௦

முன்னுரை 


பிற சொற்களை நூலுள் ஆய்ந்தறிக.

இவர்தம் சொற்சிக்கனத்தை பின்வரும் சில எடுத்துக்காட்டுகளில் காண்க

1."வியப்புக் கொள்ளற்க" என்னும் நெடிய தொடரை மிகவும் சுருக்கமாக வியவற்க (439) என்று சுருங்கப் பயன்படுத்தியவரும் இவரே.

2. 'தெளிவிலாத' ஒன்றை என்பதைத் 'தெளிவிலதனை' (454) என்றும்,

3. 'ஆகாதவர்' என்பதை 'ஆகார்' (895) என்றும்,

4. 'ஆக்கம் தருகின்ற வழிகளை ஆகாறு' (478) என்றும்,

5. 'செலவு செய்கின்ற வழிகளைப் போகாறு' (478) என்றும்,

6. 'செய்ய முடிந்த ஒன்றை இயல்வது' (734) என்றும்,

7. 'செயலைச் செய்து முடிக்கும் திறனுள்ளவரை ஆற்றுவார்' (985) என்றும்,

8. 'பெரியோர்கள் விரும்புகின்ற விருப்பநெறிகளை உலகவாம்' (215) என்றும்,

9. 'கண்ணைப் போல் கருதத் தக்கவர்களைக் கண்ணன்னார்' (1061) என்றும்,

10.'கொழுந்துவிட்டு இலைகள் மல்கி ஓங்கி வரும் மரத்தைப் போன்று என்பதைத் தளிர்த்தற்று' என்றும்,

- இன்னும் பலவாறும் சுருங்கச் சொல்லும் அழகு இவர்க்கே உரியது என்க.

நுண்பொருள் தரும் சொற்களை இவர் கையாள்வதற்குச் சில சான்றுகள் வருமாறு:

1. எல்லார்க்கும் விளங்குமாறு எளியமுறையில் பொருள் தருவதை 'எண்பொருளவாக (42) என்றதும்,

2. எப்பொழுதும் அடங்காத, நிரம்பாத, தொடர்ந்து மேலும் மேலும் தோன்றிக் கொண்டே இருக்கின்ற ஆசையுணர்வைக் குறிக்க ஆராவியற்கை அவா (370) என்றதும்,

3.'என்றும் மாறுபடாமல் நிலைப்பட்டு இயங்கும் விசும்பு, ஒளி காற்று முதலிய இயற்கைப் பொருள்களைக் குறிக்க பேரா இயற்கை (370) என்று கூறியதும்'

4. என்றும் நிலைத்திருக்கின்ற இறைமைப் பொருளை மெய்ப்பொருள் (355,423) செம்பொருள் (358) என்றதும்,