பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௪௯


1950இலும்

அறிஞர் ஐ.டி தங்கசாமி அவர்கள் மொழிபெயர்ப்பு 1955-இலும் அறிஞர் இரா.பி. சேது(ப்பிள்ளை) அவர்கள் நூல் 1955-இலும், அறிஞர்கள் ஜி.யு. போப், டுரு, இலாசரஸ், எல்லிசு ஆகிய நால்வரின் மொழிபெயர்ப்புகள் ஒரு சேரப் பதிப்பித்த மொழிபெயர்ப்புகள் 1958-இலும்,

அறிஞர் வி.வி.எஸ். ஐயர் அவர்கள் மொழிபெயர்ப்பு 1961-இலும், அறிஞர் கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் மொழிபெயர்ப்பு 1962-இலும் வெளி வந்துள்ளனவாகத் தெரிய வருகிறது.

அறிஞர் செருமன் (Germon) மொழிபெயர்ப்புகள்:

அறிஞர் ஏ.எப். கேமர்சு (A.F. Camers) மொழிபெயர்ப்பு 1803 இலும், அறிஞர் பிரடெரிக் ருக்கெர்ட் (Friederich Ruckert) அவர்கள் மொழிபெயர்ப்பு 1847-இலும்,

அறிஞர் கர்ல் கிரெளல் (Karl Graul) அவர்கள் நூல் 1854இலும் மறுபதிப்பு 1856இலும் மேலும் அவர் எழுதிய மொழி பெயர்ப்பு 1865-இலும் வெளிவந்துள்ளனவாகத் தெரிய வருகிறது.

இவையன்றி, இலத்தீன் (Latin) மொழிபெயர்ப்புகள்: அறிஞர் சார்லசு கிரெளல் (Charles Graul) அவர்கள் மொழிபெயர்ப்பும் திறனாய்வும் 1886இலும்,

அறிஞர் மதத் தந்தை சி.சோசப்பு பெசுகி (Fr. C. Joseph Besche)அவர்கள் எழுதிய இலத்தீன் மொழி பெயர்ப்பு 1730இலும் வெளிவந்துள்ளனவாகத் தெரிகிறது.

இனி, பிரெஞ்சு (French)மொழி பெயர்ப்புகள்:

அறிஞர் மதத் தந்தை சி. சோசப் பெசுகி (Fr. C. Joseph Besche) அவர்கள் மொழிபெயர்ப்பு 1730இலும்,

அறிஞர் ஈ.ஏரியல் (E.Ariel) அவர்கள் மொழிபெயர்ப்பும் திறனாய்வு, 1848இலும்,

அறிஞர் பி.சி. தேதுயுமாசுடு (P.G.de Dumast) அவர்கள் எழுதிய விரிவான ஒப்பீட்டுத் திறனாய்வு 1857-இலும்

அறிஞர் உலுயுசு சா கோலியட் (Louis Jacollist) அவர்கள் ஆய்வு நூல் 1867இலும்,

அறிஞர் எம்.இலாமாய் செசுசி (M Lamaisesse)அவர்கள் மொழிபெயர்ப்பு 1867இலும்

அறிஞர் உலுயுசுசா கோலியட் (Louis ja Colliot) அவர்கள் மொழிபெயர்ப்பு