பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரு௬

முன்னுரை


எண்ணியதை வெளிப்படுத்தும் துணிவு தவிர. இங்குக் கூறப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில், மிகவும் ஆழ்ந்த சிந்திப்பின் வெளிப்பாடுகளாக உள்ள உரைச் செல்வங்களை இம் மெய்ப் பொருள் நூலின் ஒவ்வொரு குறளுரையிலும் உறுதியாகக் காணலாம். அவை பொருந்திய உரைகள் என்பதும் பொருந்தா உரைகள் என்பதும், காலத்தின் தேர்ச்சிக்கும் கற்றுணர்ந்தார் மாட்சிக்கும் உற்றுணர்ந்தார் ஆட்சிக்கும் விடப்பெற்றுள்ளன.

அவை பொருந்திய உரைகளாகத் தேர்வு பெறின், வழக்குற்று வாழ்ந்து வழங்கட்டும் அற்றேல் அவை வழக்கொழிந்து மறைந்து போகட்டும்.

திருக்குறளுக்கு உரை காண்பதில் பற்பல சிக்கல்களை எதிர்கொள்ளுதல் வேண்டும். அவற்றுள் தலையாயது, அதிலுள்ள பற்பல சொற்களுக்கு அவர் காலத்தில் இருந்திருந்த பொருள்களை ஆய்ந்து துழாவித் தேடிக் காணுதலாகும். இதில் அக்காலப் பொருளே தேர்வுக்குரியதாம் என்க.

எடுத்துக்காட்டுகளாகச் சில பல சொற்களைப் பார்க்கலாம்.

சொற்கள் அக்காலப் பொருள் இக்காலப் பொருள்

அறம் பொதுநலம் கருதிய

                 உணர்வு, உரை செயல்     தர்மம் (ஆரியநெறி) 

அந்தணர் அருளாண்மை உடையவர்,

துறவி, அறவுணர்வுச்
சான்றோர்,முதலியர் ஆரியப் பார்ப்பனர்,
                                         பிராமணர் 

ஆக்கம் செல்வம், வருவாய், செய்வது

             நல்விளைவு

சலம் வஞ்சனை ::::::::::::::::::நீர்

(இரண்டும் தமிழ்ச் சொற்களே).

தடித்தல் குறைத்தல் பருமனாதல், வீங்குதல்

தெரிதல் ஆராய்தல் :::::::தெரிந்து கொள்ளுதல்

தொடுதல் தோண்டுதல் கையால் தொடுதல்,

நாற்றம் மணம் தீநாற்றம்

பயிலுதல் பழகுதல் கற்றல்

பூசல் வெளிப்படுதல் பூசுதல், மனவேறுபாடு