பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௬௩



மேலும் இவ்விடத்து இன்னொரு வரலாற்றுச் செய்தியும் நினைவிற்கு வருகிறது.

முன்னொரு கால் தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் அதிகாரியாக இருந்த ஆங்கிலேய ஆனால் தமிழ் தெரிந்த ஒருவர் தாம் திருக்குறளைப் படிக்க விரும்பினார். அதற்கென அவர் தமிழறிஞர் தியாகராசர் அவர்களைத் தமக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே, அவரும் இசைந்து அவர்க்குத் திருக்குறளை முறையாகச் சொல்லிக் கொடுத்தார்.

அவ்வகையில் ஆசிரியர் அவர்க்கு ஒரு நாள்,

"தக்கார் தகவிலர் என்தவரவர்,
எச்சத்தால் காணப் படும்' (114)

என்னும் குறட்பாவில், 'எச்சம்' என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் 'மக்கள்' என்று பொருள்கூறியிருப்பதை விளக்கிக் கூறினார். மறுநாள் அவ்வாங்கில அதிகாரி, அக்குறட்பாவிலுள்ள 'எச்சம்' என்னும் சொல்லை நீக்கிவிட்டு, அவ்விடத்தில் மக்கள் எனும் சொல்லைப் பெய்து, அதைத் தம் ஆசிரியரிடம் காட்டித் தாம் அத்திருக்குறளின் இரண்டாம் அடியை 'மக்களால் காணப்படும்' என்று திருத்தியிருப்பதாகவும் அஃது யாப்பிலக்கணத்திற்கும் மிகவும் பொருந்தியிருப்பதாகவும் கூறி மகிழ்ந்தாராம். இந்நிகழ்ச்சியைப் பண்டாரகர் உ.வே. சாமிநாதர் அவர்கள் தம்மின் 'கண்டதும் கேட்டதும்' என்னும் நூலில் பதிந்துள்ளார்.

நம் அறிஞர் ஆனந்தன் அவர்களின் திருக்குறள் அமைப்பியல் திருத்தமும் இதைப் போலும் மிகவும் வருத்தந் தரத்தக்கதே ஆகும் என்க.

திருக்குறள் கருத்துகளில் புதிய பொருளைக் காண விரும்பினால் அதே அமைப்பில் - அஃதாவது இன்று நமக்குக் கிடைத்துள்ள பால், இயல், அதிகார, அமைப்புகளிலேயே புதுப்புதுப் பொருளைத் தருவதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்காக ஏற்கனவே உள்ள திருக்குறள் அமைப்பை, அது தவறாகவோ, பொருந்தாததாகவோ இருப்பினும்கூட, அதைச் சிதைப்பது வன்முறைச் செயலாகும். ஓர் அழிப்பு முயற்சியாகும். மதுரை அங்கயற்கண்ணி (மீனாட்சி) கோயிலும், தஞ்சைப் பெருவுடையார் (பிரகதீசுவரர்) கோயிலும், ஆக்ராவிலுள்ள தாசுமகாலும் பழுதுபட்டனவென்றால், அவற்றின் வடிவங்களை மாற்றாமல், சிதைவுகளைச் சுண்ணங்களாலும், வண்ணங்களாலும் சீர் செய்யலாமே தவிர, அவற்றை அடியோடு இடித்துச் சாய்த்துவிட்டு, மீண்டும் தம் விருப்பத்திற்கும், இக்காலக் கட்டடவியற் கலை வளர்ச்சிக்கும் ஏற்ப, புதிய வகையில் கட்டிக்கொண்டு, இவைதாம் அவை என்று அடித்துக் கூறுவது எத்துணை அறியாமை! பேதைமை! வரலாற்றுக்கு ஒவ்வாமை! திருக்குறளின் இப்பொழுதுள்ள அமைப்பையும் இக்கால அறிவியல் வளர்ச்சிக்கும் கருத்து வளர்ச்சிக்கும் ஏற்ப வடிவமைப்பதும் அத்தகையதுதான் என்பதை உணர்ந்து கொள்-