பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௬௬

முன்னுரை



'சிற்றினஞ் சேராமை' - யுள் 4-ஆம் குறளாக வரும் இது, ஆனந்தன் நூற் பகுப்பில் 'அறிவு' என்னும் இயலுறுப்புத் தலைப்பில் முதற் குறளாக வருகிறது.

2. தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

68

'மக்கட்பேறு' அதிகாரத்துள் 8 ஆம் குறளாக வரும் இது, 'தனி உடைமையைத் தகர்த்திட' என்னும் தலைப்பின் கீழ் 21 ஆவது குறளாக வருகிறது.

3. ஒவ்வோர் அதிகாரப் பகுப்பிலும் உள்ள பப்பத்துக் குறள்கள் எண்ணிக்கை குறைக்கப்பெற்றும், சில தலைப்பியல்களுள் மிகுக்கப் பெற்றும், நிரல் நிறை மாற்றப் பெற்றும், வேறு வேறு இயலுறுப்புத் தலைப்புகளில் சேர்க்கப் பெற்றும் இருத்தல்.

(எ-டு) 'மக்கட்பேறு' இயலுறுப்பில் எட்டுக் குறட்பாக்களும் 'சுற்றந் தழால்' என்னும் 'சுற்றம் தழுவல்' இயலுறுப்பில் ஆறு குறள்களுமே உள்ளன. இது, பிற குறட்பாக்கள் அவ்வத் தலைப்புகளின் கீழ் வாரா என்று உரையாசிரியர் கருதுவது திருவள்ளுவத்திற்குப் பொருந்தாதது என்று கருத இடந் தருகின்றதன்றோ?

- இவைபோலும் பற்பல மாற்றங்களும், சிதைவுகளும், பூசல்களும், புரைகளும், குறைகளும், குற்றங்களும், தன்மூப்புணர்வுகளும், அறிவுச் செருக்குணர்வுகளும், மனமுதிர்வின்மைகளும், போலி மெய்யியல் கூறுகளும், பொதுவுடைமை யென்னும் பெயரால் சிதைக்கப்பெற்ற தனிவுடைமைச் சிறப்பியல்களும், பொதுவறம் என்னும் பெயரால் முனை மழுக்கப் பெற்ற தனியறப் படிவுக் கூறுகளும் 'திருக்குறளின் உண்மைப் பொருள்' என்னும் அறிஞர் குச. ஆனந்தன் அவர்களின் அவ்வுரை நூலுள் காணப்பெறுகின்றன.

இவற்றுக்கெல்லாம் அவ்வவ் விடங்களில் ஆசிரியர் கூறும் அமைவுகள் நகைக்கத் தக்கன; எள்ளத் தக்கன; முகஞ்சுழிக்கத் தக்கன. அவ்வகையான அமைவுக் கூற்றுகள் சிலவற்றை இங்குக் காண்க

'மற்ற குறள் பொத்தகங்களில் காணப்படுகிற 133 அதிகாரங்களின் அடைவும், அவற்றின் பெயர்களும், குறள் வைப்பு எண் முறையும் இங்குப் பின்பற்றப் படவில்லை' என்பதும் உண்மைதான். ஆனால் பொருள் தொடர்பும் விளக்கமும் சீர்மையும் கருதி, இந்நூல் புதிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (என்னுரை பக் X)

-இஃது எப்படியிருக்கின்ற தென்றால் 'பல்வேறு கணவன் மனைவியர் திருமண முறையால் இல்லறத் துணைவர்களாக இதுவரை வாழ்ந்து வருவது