பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௭௪

முன்னுரை


ளுதல் வேண்டும். அதற்கொரு முற்றுப் புள்ளி இடுதலும் வேண்டும்.

சென்ற நூற்றாண்டு வரலாற்றையே நம்மால் சிதைவும் புதைவும் இன்றி எழுதி விட முடியாது. நாமே நம் வாணாளில் பற்பல சிதைவுகளுக்குள்ளாகிறோம்.

எனவே திருக்குறளில் ஏற்பட்டுள்ள அனைத்தையும் கருத்துச் சிதைவுகளாகவோ, காலச் சிதைவுகளாகவோ கொண்டு, கூடல், குறைதல், திரிதல், திரித்தல், புகுதல், புகுத்தல் ஆகிய அனைத்துச் சிதைவுகளுக்கும் உட்பட்டு, இன்று நின்ற நிலையை ஏற்றுக் கொள்வதே ஒரு வகையில் திருக்குறளைக் காப்பதாகும். இருப்பினும், இம் மெய்ப்பொருள் உரையில், அதிகார முறை மாற்றங்கள் எதுவும் செய்யப் பெறவில்லையெனினும், சில அதிகாரங்களில், குறள் வைப்பு முறை அறிவுத்திக்குத் தக்க வகையில், தவிர்க்க முடியாத நிலையில் மாற்றப் பெற்றுள்ளது. இவற்றால் அதிகக் குழப்பங்கள் நேர்வதற்கில்லை. அதிகாரத்துள் சொல்லப் பெற்ற கருத்துகள் நிரல் நிறையாகச் சொல்லப் பெறுதலின் இன்றியமையாமை கருதியே அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது. அறிஞர்கள் அவைபற்றிச் சிந்தித்து, இம்மாற்றங்கள் தேவை என்பதை உணரலாம்.

- இது பற்றி மேலும் சிந்தித்து எழுதுதல் வேண்டும்.

பரிமேலழகர் ஆரியக் கருத்துகள்

1.அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்.

2.ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளின்று அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல்.

3. அது (அறந்)தான் நால்வகை நிலைத்தாய் வருணந் தோறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்கள் ஒழித்துக் கூறப்பட்டது.

- உரைப்பாயிரம்

4.தமிழெழுத்திற்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் -21

5.தீய சொற்களாவன.. வருணத்திற்கு உரிய வல்லனவுமாம் (139)

6.இனி, மனு முதலிய அறநூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்களெல்லாம் இவர் தொகுத்துக்கூறிய இவற்றுள்ளே அடங்கும். (240)