பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவருள் மணக்குடவர், பருதி, பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் என்னும் ஐவருரையே இன்று நமக்குக் கிடைப்பன.

- இவ்வைவருள்ளும் காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர் - இவரைச் சிறப்பித்துக் கூறும் பாக்கள்

(பாவாணர் மரபுரையில் காண்க)

- பரிமேலழகர் தொண்டைநாடு, காஞ்சிபுரம், அருச்சக வேதியர், பெயர் அழகர்)

இவர் கம்பர் காலத்திற்கு முந்தியிருக்கலாம் அபிதான சிந்தாமணி

பக். 10.45

நச்சினார்க்கினியர் காலம் இவர் திருமுருகாற்றுப் படைக்கும் பரிபாடற்கும் உரை செய்ததாகக் கூறுவர்.

8. திருவள்ளுவ மாலைச் செய்யுள்கள்

  • 4,47இரண்டும் திருக்குறள் மூன்று உறுதிப் பொருள்களைப் பற்றி மட்டும் கூறகின்றதெனவும்,

செய்யுள்கள் 7,8,19,2223,38,40,44,50 ஆகிய 9 செய்யுள்களும் திருவள் ளுவர் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் என்றும் கூறுகின்றன.

திருவள்ளுவ மாலையில் இந்நூல் பற்றிச் சொல்லப் பெற்றுள்ள கருத்து களை ஒருங்கே தொகுத்துப் பார்த்தால் இதுபோல் ஒரு நூலுக்கு எவராலும் எக்காலத்தும் எந்தவிடத்திலும் ஒரு பெருமை கிடைத்திலது என்றே சொல்லுதல் வேண்டும்.

இறைமை வெளிப்படுத்திய திருமறைகள் என்று சொல்லப் பெறும் நூல்கள், மாந்தனைப் பற்றி மிகுதியும் பேசுவதில்லை. ஆனால் மாந்தன் ஒருவனால் வெளிப்படுத்திய ஒரு நூல் இந்த அளவில் மாந்தவியக்கத்தைப் பற்றிப் பேசியிருப்பதை உலகில் எந்த இனத்திலும் எந்த மொழியிலும் எவராலும் காட்டுதற்கு இயலாது. எனவே இது மீமிசை மாந்தத்தின் வற்றாத மாந்த அறிவியல் கூறு. இது போலும் ஒரு நூல் உலக மொழிகளுக் கெல்லாம் மூத்ததும் முதலானதும், ஒப்பற்ற இயற்கைத் தன்மை வாய்ந்ததுமான தமிழ்மொழியில்தான் எழுதப் பெறல் இயலும் என்க. எனவே இதனை தமிழ்மொழியின் ஒரே மலர்ச்சி என்று கூறலாம். உலகிலுள்ள மொழிகளில் தோன்றியுள்ள நூல்கள் அனைத்தையும் அவ்வம் மொழி வரிசைப் படுத்தி,