பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவற்றுள் தலைசிறந்ததான மக்கட்குப் பயன்படும் ஒரே நூலைத் தெரிவு செய்யுங்கள் என்று அவ்வம் மொழியாளர்களைக் கேட்டால், அவரவர் களும், அவ்வாறான ஒரு நூலைத் தேர்வதற்கு மிகவும் மிகவும் இடர்ப்பட வேண்டியிருக்கும். அல்லது அவ்வம் மொழியார்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மலைக்க வேண்டியிருக்கும்.

ஆனால், தமிழ்மொழியில் அவ்வாறு தெரிவு செய்யும்படி நேர்ந்தால் அம்மொழியின் ஒரு நூலாகத் திருக்குறளைத்தான் அனைவரும் கருத்து வேறுபாடின்றித் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.

இனி, இது மட்டன்று. அவ்வாறு ஒவ்வொரு மொழியிலும் அவ்வம் மொழியினர் தேர்வு செய்யும் ஒவ்வொரு நூலையும் ஒரு வரிசைப்படுத்தி, அவற்றுள் இவ்வுலக மக்கள் இனம் முழுமைக்கும் பயன்படும் ஒரே நூலைத் தெரிவு செய்யம்படி அவ்வம் மொழியின் கண் உள்ள அறிஞர்கள் அனைவரையும் ஒரு சேரக் கேட்டால், அவர்கள் இத்திருக்குறள் ஒன்றைத் தவிர வேறெதையும் தேர்வு செய்ய மாட்டார் - என்று உறுதியாகக் கூறலாம். இஃது அனைத்து மக்கள் உணர்வுக்கும் பொருந்தியதாகவும் பொதுமை வாய்ந்ததாகவும் கூறலாம்.

திருவள்ளுவ மாலையில் கூறப்பெறும் தகவுரைகள்

  • என்றும் புலராது (வாடாது தேன் ஊறும் மலர் போன்றது திருக்குறள்.
  • இதனைத் தலை வணங்க வேண்டும்; வாய் வாழ்த்த வேண்டும்; மனம் சிந்திக்க வேண்டும்; செவி கேட்க வேண்டும்.
  • சிறு பனித்துளியில் பனைமரம் தெரிவது போல், இதன் ಆ೮ಕಹ அளவில் அறிவுப் பொருள்கள் பெருகத் தெரிகின்றன.
  • இந்நூலின் சிறிய அடிகளால் மாந்த இனத்தின் சிந்தனைகள் அனைத்தும் ஆராய்ந்து அளக்கப்பெற்றுள்ளன.
  • உலகம் உய்ய இந்நூல் தந்த திருவள்ளுவர்க்கும் உலகம் நிலைக்க மழை தரும் மேகத்திற்கும் உலகம் நன்றி காட்ட இயலாது.
  • இத்தகு முழுப் பொருள்களும் விளங்குமாறு நூல் தந்த ஒரு தெய்வத்தை, அறிவு மேதையை மறந்தும் கூட வெறும் வள்ளுவன் என்னும் சாதிப் பெயரால் கூறுபவன் ஒரு பேதையே ஆவான்.
  • சுப்பிரமணிய பாரதி திருவள்ளுவரைப் புகழ்வது போல் கூறுகிற ஒரு பாடலில் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திருவள்ளளமாலைப் பாடலைப் படித்த