உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

௩௩ 


 அப்படிப்பட்ட செயல் நடக்கக்கூடியதா அன்றா என்பதுபற்றித் தம் கருத்தைத் தெரிவித்தல். 2. இந்நிலை இயற்கைக்கு உடன்பாடு உடையதா - அல்லதா என்பது பற்றிச் சுட்டல், 3. இது "கற்பனை" என்று தெளிவாகச் சுட்டல், 4. இது, அக்காலக் குமுகச் சூழலில் எங்கும் பரவி நின்ற நம்பிக்கை என வரலாறு கூறல், 5. இது, அக்கால தெய்வநம்பிக்கையுள் ஒன்று எனல் இத்தொடு மட்டுமன்று இது மிகைப்படுத்தப் பெற்ற தெய்வ நம்பிக்கையாகும் என்றவாறு மேலுந் தெளிவுறுத்தல் 6. இது, மூடநம்பிக்கை எனல். 7 நூலாசிரியர்க்கும் (திருவள்ளுவர்க்கே!) இம் மூடநம்பிக்கை இருந்துள்ளது என்றவாறே மிகமிக வெளிப்படையாகவே ஒரு துணிவுக் கருத்தை முன்வைத்து நயன்மை மொழிதல். 8. பகுத்தறிவு சான்ற உரைகள் சிலவற்றை உரையாசிரியர்கள் ஏற்றி வைத்தமை - திருவள்ளுவரையே அக் கருத்தினின்று மீட்டெடுத்து உயர்த்திப் பிடிப்பதற்கான முயற்சிகளே என மொழிதல், 9. அப்படி உரைவரைதல் கூடவே கூடாது, அது தேவையின்று என்றவாறு கண்டிப்புமுறை கூறல்.

இம் மேற்குறித்தவாறான தொண்டு (9) வெளிப்பாடுகளையும் "பெய்யெனப் பெய்யும் மழை" எனவரும் உரைத் தொடருக்கான விளக்கவுரைக் குறிப்பிற் பதித்துள்ளமையும் - இத் தற்கருத்து விளக்கத்தின் எள்முனை அளவும் அக் குறட்பாவுக்கு என வரைந்துள்ள பொழிப்புரையாகிய நிழலுரையிற் படாதவாறு காத்துள்ளமையும், உரையாசிரியரொருவர் உரைகூற வருகையில் எத்தகு நயன்மையுணர்வைக் கடைப்பிடித்தொழுகவேண்டும் என்பதற்குரிய சான்றுக் காட்சிகளாகும்! மூலத்தின் பொழிப்புரையில் மூலமுனைவனின் அறிவு மட்டுமே ஒளிறும்படியாகக் காட்டவேண்டுமேயன்றி - வேறு ஒளிப்பு என்பதே கூடாது! அஃதாவது, உரையாசிரியர் தம் தற்கருத்து முளைப்பின் பசும்புல்லின் தலைகாண்பும் அப்பொழிப்புரையில் நேருமாறு விடக் கூடாது! தெளிவுஞ் சுளிவும் முளிவும் தற்கருத்துத் தளிர்வும் உரையுட்படலாகாது! உள்ளது உரைத்தலே, பொழிப்புரை கூறுங்கால் உரையாசிரியர் கொள்ள வேண்டிய கடமை! மூல ஆசிரியருடன் முரண்படுகையில் அதற்குரிய களத்தைத் தனிப்பெற அமைத்துக் கொண்டு தக்க காரண கருமியங்களை ஏரணமுறையிலும் உலகியல் நடப்புச் சான்று முறையிலுமாகச் சாற்றுதல் வேண்டும்! அஃதாவது, மூல இடத்திலேயே முரண் கொள்ளுதல் முறையே அன்று! அது, முறைப்பே! அங்குத் தனக்குரிய தனிக் கருத்துக்களை அதற்குரிய வரைவில் (எல்லையுள்) வரைகை - வரைவில் (எல்லையில்லாத வரம்பு மீறிய செயலொப்பது: உள்ளதை உள்ளவாறே உரைத்து முன் நிறுத்தல் பொழிப்பில் செய்ய வேண்டிய பழிப்பில்