பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரு௮

முன்னுரை 



- அந்நீரில் பிணங்களை எறிந்து மிதக்கவிட்டுச் சடங்குகள் செய்வார், பலர்;
- அந்நீரை அருந்துகின்றவர்கள், அதிலுள்ள நன்மைகளை, கருத்துகளைக் கற்று, தம் வாழ்வு நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள், பலர்;
- அதில் குளித்து மூழ்கிக் களிப்பவர்கள் அதைப் படித்துப் புலமை பெற்று, அக்கருத்துகளை மக்களுக்குச் சொற்பொழிவு வாயிலாகவும், பட்டி மன்றங்கள் வழியாகவும், தங்கள் உரைத்திறன் நினைவாற்றல் திறன் வழியாகவும் பரப்பிப் புகழ் பெறுபவர்கள்.பலர்.
- அந்நீரைக் குப்பிகளிலும் குடங்களிலும் நிரப்பிக் கொண்டுபோகின்றவர்கள்-அந்நூலையும் உரைகளையும் அச்சிடுவித்தும் பரப்பியும் அவற்றின்வழிப் பொருள்செய்து பிழைக்கின்ற வணிகர்கள், ஆவர்.
- அதில்,தம்முடைய அழுக்குடைகளை வெளுத்துக் கொள்பவர்களும், அதில் தம் மனமாசுகளைப் போக்கிக் கொள்பவர்களும், தம் அறியாமைகளாலும் அகங்காரத்தாலும் அதன் கருத்துகளுக்கு மாசு கற்பிப்பவர்கள் ஆவர்.
- அந்நீரில் தம் கைகால்களைக் கழுவித் துய்மையிழக்கச் செய்பவர்கள், பொறாமையாலும், அந்நூற் கருத்துகள், தங்கள் கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக இருப்பதாலும், அந்நூற் பெருமைக்கு இழுக்குச் சேர்ப்பவர்கள் ஆவார்கள்.
- அந்நீரில் பிணங்களை எறிந்து மிதக்கவிட்டுச் சடங்குகள் செய்வார், தத்தம் மதவியற் கருத்துக்களை அதிற் புகுத்தி, எல்லார்க்கும் பொதுவான பொது அற நூலாகிய இதனைத் தம்தம் மதநூல் போல் ஆக்கிக் காட்டும் வல்லடி வழக்கர்கள்.
இனி, திருக்குறள் ஒரு மருந்துச்சாலை போன்றது.
- அதில், ஒவ்வொருவரும் தம்தம் நோய்களைப் போக்கிக் கொள்ளும் மருந்துகளைத் தேடி எடுத்து, அவற்றை உண்டு செரித்துத் தம்தம் பிணிகளைப் போக்கிக் கொள்வதை வாழ்வியல் கடமையாகக் கொள்ளுதல் சாலச் சிறந்தது என்க.
மற்று, திருக்குறள் ஓர் அரிய அறிவிலக்கிய நூல் ஆகும்.
- இலக்கிய நூல்களைக் கற்க விரும்புவார். இவ்வறிவிலக்கியத்தையும்