பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

க௩


“முப்பால் மொழிந்த முதற்பாவ லர்ஒப்பார்
எப்பா வலரினும் இல்”

- ஆசிரியர் நல்லந்துவனார்.

“எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லை”

- மதுரைத் தமிழ்நாகனார்.

“புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்”

- மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார்.

“குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பான்முறைநேர் ஒவ்வாதே முன்னை
முதுவோர் மொழி”

- கோவூர் கிழார்.

“திருவள் ளுவர்தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம்பூண் டார்”

- செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்.

“உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு”

- செயலுரர்க் கொடுஞ்செங்கண்ணனார்

“இழுக்கின்றி
என்றுஎவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றுஇவர் இன்குறள்வெண் பா”

- நச்சுமனார்

“தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்ளிருள் நீக்கும் ஒளி“

- மதுரைப் பாலாசிரியனார்.

- இன்னோரன்ன கழகப் பெரும் புலவர் பலரும் அவரையும் அவர் நூலையும் அறிவாற்றலையும் வியந்தும் மகிழ்ந்தும் பாடியதாக உள்ள பாடல்கள் அனைத்தும் கொண்ட திருவள்ளுவமாலை என்னும் ஒரு பாடல் தொகுப்பு உண்டு. இந்நூல் பற்றிப் பல்வேறு கருத்துகள் உண்டு எனினும், இஃதொரு சிறப்புப் பாயிரமாக நின்று திருவள்ளுவத்தைச்