பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௬

முன்னுரை "அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”

— 430.

"அறனறிந்து மூத்த அறிவுடையார்”

– 441.

"அரியகற்று ஆசற்றார்"

– 503.

"அறனறிந்து ஆன்றமைந்த சொல்"

– 635.

"நாநலம் என்னும் நலனுடைமை"

– 641.

"ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு”

– 642.

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்"

– 643.

“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினுங்கு இல்”

– 644.

"ஆராய்ந்த சொல்வன்மை"

– 682.

"ஆராய்ந்த கல்வி'

– 684.

"அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த துய்மை யவர்"

– 711.

"இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்"

– 712.

“ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்"

– 714.

"கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து”

– 717.

"வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்"

– 721.

-என்றவாறு அவர் பயன்படுத்திய சொற்களையும், அவற்றால் அவர் விளக்க வந்த அரும்பொருள்களையும் அரிய செய்திகளையும் இந்நூல் முழுவதும் பரக்கக் காணலாகும்.

ஒருவரின் புலமை,

  1. அவர் கூறும் கருத்து.
  2. அதைக் கூறும் முறை.
  3. அதைக் கூறுதற்கு அவர் பயன்படுத்திய சொற்கள்.

(அஃதாவது, சொற்களின் எண்ணிக்கை, அவற்றின் பொருத்தம், வேறு சொற்களால் அக்கருத்தைச் சொல்ல இயலாமை - அஃதாவது "வெல்லுஞ் சொல் இன்மை")