பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

௬௭4) அக்கூற்றின் உண்மை.

5) உலகியல் பொருத்தம்

(அஃதாவது, கற்பனை, புளுகு, பொய், புனைந்துரை, வரட்சி, மிகைப்படுத்தம் ஆகியவை இல்லாமற் கூறுதல்)

ஆகியவற்றால் அறியப்படும்.

- இவ்வகைகளில் அவர் வெளிப்படுத்திய இப் பெரும்புலமை நூலை மதிப்பிடுவதெனின், அவரினும் எல்லாக் கூறுகளினும் மேம்பட்டுச் சிறக்கும் மிகப்பெரும் புலவர் ஒருவராலேயே இயலும் என்க. அவரைச் சுருக்கமாக, "அறச்செல்வர், அறிவின் மேதை, வாயுரத்தின் பெரும்புலவர், வற்றாத அறிவூற்று, உயிர்ப்பாறு, தமிழினத்தின் பாயிரத்தைப் பாடிவைத்த முதல் தலைவர், வல்ல திருவள்ளுவர்" உரையாசிரியர், தென்மொழி , சுவடி 26; ஓலை;10

- என்றவாறெல்லாம் அவரைப் புகழ்வதும் போற்றுதலும்கூட வானும் மலையும் கடலும் காற்றும் நெருப்பும் நீரும் கண்டு மலைதலும் குலைதலுமே ஆகும் என்க. எனவே திருவள்ளுவரின் புலமைப் பெருமைக்குத் திருக்குறளே உரைகல் என்க. இதனையும் அவர் கூற்றே எண்பிக்கும்; என்னை?

"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” - 505.

என்பார் ஆகலின்.

இனி, அவரின் தகுதியையும் திறமையையும், பெருமையையும் அருமையையும் அச்சான்றோரின் வாய்மொழிகளாலேயே கூறுவதன்றி, வேறுபிறர், பிற எளிய வறிய சொற்களால் கூறுதலும் ஆகா தென்க. அவை இவை:

வாலறிவர் (2); தனக்குவமை இல்லாதார் (7); அறம் பூண்டார் (23); செயற்கரிய செய்தார் (25); பெரியர் (23); ஐந்தின் வகை தெரிவார் (27); நிறைமொழி மாந்தர் (28); குணம் என்னும் குன்றேறி நின்றார் (29); அந்தணர், அறவோர் (30); மனத்துக்கண் மாசிலர் (34); வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் (50); சான்றோர் (69); ஆருயிர் (73); செம்பொருள் கண்டார் (91); இன்சொலவர் (94); நல்லவை நாடி இனிய சொலர் (95); பண்பின் தலைப் பிரியார் (97); மாசற்றார் (106); செப்பம் உடையவர் (112); தக்கார் (114); நன்றிக்கண் தங்கியார். (117); சொற் கோட்டம் இல்லாதவர் (119); அமரர் (12) அறிவறிந்து ஆற்றியவர் (123); நிலையில் திரியாதவர் (124); நா காத்தவர்.(127) கற்றடங்கல் ஆற்றியார் (130); ஒழுக்கம் உயிரினும் ஓம்பியவர்