பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எ௦

முன்னுரை 


கடித்து செய்தவர் (686); துன்பம் உறவரினும் துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை செய்தவர் (669); எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு என்று உணர்ந்தவர் (670);

சூழ்ச்சி, முடிவு, துணிவெய்தல், அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது என்றறிந்தவர் (671); துாங்கிச் செயற்பால தூங்கியும், துாங்காது செயற்பால தூங்காதும் ஆற்றியவர் (672); ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று என்றறிந்து. ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செய்தவர் (673); வினை, பகை என்று இரண்டின் எச்சம், தீயெச்சம் போலத் தெறும் என்றுணர்ந்தவர் (674); பொருள், கருவி, காலம், வினை, இடம் என இவ்வைந்தும், இருள் தீர எண்ணிச் செய்தவர் (675); முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செய்தவர் (676); செய் வினை, செய்வான் செயல்முறை, அவ்வினை உள்ளம் கொளச் செய்தவர் (677); வினையால் வினையாக்கிக் கொள்ளும் திறத்தவர் (678); நட்டார்க்கு நல்ல செய்தவர் (679); பெரியார்ப் பணிந்தவர் (680); அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம் பண்புடைமை கொண்டவர் (681); அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை கொண்டவர் (682); நூலாருள் நூல் வல்லர் (683); அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி இம் மூன்றினும் செறிவுடையவர் (684); தொகச் சொல்லித் துாவாத நீக்கி நகச் சொல்லி நன்றி பயந்தவர் (685); கற்றுக் கண் அஞ்சாது செலச் சொல்பவர்; காலத்தால் தக்கது அறிந்தவர் (686); கடனறிந்து காலம் கருதி, இடனறிந்து எண்ணி உரைத்தவர் (687); தூய்மை, துணைமை, துணிவுடைமை. இம்மூன்றின் வாய்மை வழி உரைத்தவர் (688); வடுமாற்றம் வாய்சோரா வன்கண் உடையவர் (689); இறுதி பயப்பினும் எஞ்சாது உறுதி பயந்தவர் (690); அரியவை போற்றியவர் (693); செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தவர் (694); குறிப்பறிந்து, காலம் கருதி, வெறுப்பில வேட்பச் சொன்னவர் (696); வினையில கேட்பினும் சொல்லாதவர் (697), நின்ற ஒளியோடு ஒழுகியவர் (698); துளக்கற்ற காட்சியவர் (699); பண்பல்ல செய்யாக் கெழுதகைமையர் (700);

எஞ்ஞான்றும் மாறாநீர் வையத்திற்கு அணியானவர் (701);தெய்வத்தோடு ஒப்பக் கொளப்பட்டவர் (702); குறிப்பில் குறிப்புணர்ந்தவர் (703); உற்றது உணர்ந்தவர் (706); அவையறிந்து ஆராய்ந்து சொன்னவர்; சொல்லின் தொகையறிந்த தூய்மையர் (711): இடை தெரிந்து நன்குணர்ந்து சொன்னவர்; சொல்லின் நடைதெரிந்த நன்மையர் (712) சொல்லின் வகையறிந்த வாய்மையர் (713; ஒளியார் முன் ஒள்ளியர் (714); நன்றென்றவற்றுள் நன்றறிந்தவர் (715); கற்றறிந்த கல்வி விளங்கியவர்(717). கசடறச் சொல் தெரிந்த வல்லவர் (717); உணர்வது உடையார் முன் சொல்லி, வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தவர் (718); நல்லவையுள் நன்கு செலச் சொல்லியவர் (719); வகையறிந்து வல்லவை வாய் சோராதவர்