பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௯௦

முன்னுரை 


கணக்கான இடங்கள்.


5) இல்வாழ்வை, (விருந்தோம்பல் உட்பட) ஆண் சார்பாகவே கூறியது.

(எ-டு) :

இல்வாழ்வான் (41), (42), இல்வாழ்க்கை வாழ்பவன் (47), வாழ்வாங்கு வாழ்பவன் (50), விருந்து ஓம்புவான் (84), மிச்சில் மிசைவான் (85).


6) வாழ்க்கைத் துணை நலத்துள் பெண்ணுக்கே தகுதிகள் கூறி ஆணுக்குத் கூறாமல் விட்டது.

(எ-டு) :

அ) மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. - 51

ஆ) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் - 52

இ) இல்லவள் மாண்பு. - 53

ஈ) கற்பென்னும் திண்மை உண்டாகல் - 54

உ) கணவற் தொழுதெழுவாள். - 55

ஊ) தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். - 56

ஏ) புகழ் புரிந்த இல். - 59

ஐ) மனை மாட்சி - 60


7) மக்கட்பேற்றுள் ஆண் மகனையே முன்வைத்துக் கூறியது:

(எ-டு) :

அ) தந்தை மகற்கு (மகனுக்கு ) ஆற்றும் நன்றி. - 67

ஆ) தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - 69

இ) மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல். - 70

(இதில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள தொடர்பு மட்டுமே குறிக்கப் பெறுகிறது)


8) பிறனில் விழையானாயை இருபாலார்க்கும் பொதுவாக்காமல், பெண்மேல் ஆண்செல்லுதலையே முன்னிருத்திக் கூறியது.