பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 - அ - 1 -2 - வான்சிறப்பு -2

படைப்புகளும், துப்பார் என்பதில் உயிர்களின் படைப்பும், அவற்றிற்கான வாழ்க்கைத் தேவை நிறைவுகளும் கூறப்பெற்றுள்ளன, என்க. இதன்வழி அறமுதல் உணர்வாகிய இறைப்பொருள் செயல்படும் வழிவகை கூறினார் என்க. முன்னைய குறளில் வான்நின்று என்று, கூறியதும், அதன் பின் வழங்குதலாகிய மழையைக் கூறியதும், இதில் அவற்றின்வழி, உலகின் அனைத்துக் கூறுகளின் படைப்புக் கூறியதும் பொருத்திக் கண்டு, இவற்றின் வழி மூலப்பொருளாகிய இறைமையென்னும் மெய்ப்பொருளைக் கண்டுகொள்ள ஏதுக்கள் காட்டினார் என்க. ☾

கங். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று) உடற்றும் பசி. 籃

பொருள் கோள் முறை:

வின் இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உள் நின்று பசி உடற்றும்.

பொழிப்புரை மழை பொழிவின்றிப் பொய்த்துப் போகுமானால், பெரும் பகுதியும் கடல்நீரால் சூழப்பெற்ற, இவ் வியத்தகு உலகத்தில், வாழ்தலுறும் அனைத்து உயிர்நிலைகளையும் உள்ள்ாக நின்று பசியுணர்வு வருத்திக் கொல்லும்,

சில விளக்கக் குறிப்புகள் : -

I. புறத்தே தெரியாமல் உயிர்களின் உடல்களுக்குள்ளே தோன்றியிருந்து அது தீர்க்கப்படாமல் நின்று வருத்துவதால், உள் நின்று உடற்றும் பசி என்றார். உயிர்களைப் புறம் நின்று வருத்துவது வறட்சி. - - 2. பொய்ப்பின் என்றது நிலையாக வன்றி இடைக்காலத்து - இல்லாமை பற்றி, நிலையாக எனின் நீங்கின் என்பது போல்

கூறியிருப்பார்.