பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

90


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் х 90

3.

விரிநி என்றது உணவு ஆக்கத்திற்குக் கடல் நீர் நேரிடையாகப் பயன்படாமை பற்றி உயர்வு நவிற்சியாகக் கூறியது. வியனுலகம் விரிந்த, அகன்ற உலகம் என்றும் பொருள் தரும். ஆயினும் பல்வேறு அறிவியல் பொருளியல் கூறுகளைக் கொண்டிருப்பினும், மழையின்றி அப்பெருமைகளால் பயனில்லை என்றற்கு வியப்புப் பொருளே ஏற்றதென்க. வியப்புகள் பலவாயினும் அவற்றால் மழையை வருவிக்க இயலாது என்றும் கூறினார் என்க. இதுவும் உயர்வு நவிற்சியாகக் கூறியதே. நின்று என்றது மீண்டும் பொழியும்வரை தொடர்ந்து பசி வருத்தும் எனற்கு, மழை பெய்யாது இடை நின்றால் முந்தைய பெயலால் சேமித்து வைத்த உணவுப் பொருள்கள் தீர்ந்து, உயிர்களைப்

பசி வருத்தும் என்றார். பசி - நீர் வேட்கையையும் உள்ளடக்கியது.

உடற்றுதல் உடல் உறுதல் - உடலுதல் உடற்றுதல் - வருத்துதல். Ꭴ.

கச ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் -

வாளி வளங்குன்றிக் கால் i4

பொருள் கோள் முறை:

புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால், உழவர் ஏரின் உழாஅர்.

பொழிப்புரை : கடலினின்று நீர்த் துளிகளைச் சுமந்து வந்து பொழிவிக்கும்) மழைமேகம் என்னும் கொடை, தான் வழங்கப் பெறும் அளவில் குறைதல் நேருமிடத்து, நீரால் உணவுப் பயிரை விளைவிக்க வேண்டி) உழவர் ஏரைப் பூட்டி வேளாண்மைக்கென நிலத்தை உழுதல் செய்ய மாட்டார்.

சில விளக்கக் குறிப்புகள்

1. புயல் - மழை மேகம் மழையைக் கொணரும் பெருங்காற்று.

வாரி வழங்குதல் செய்யப்பெறும் கொடை