பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 அ - 1 -2 - வான்சிறப்பு - 2

எவருமிலர் என்றார்.

உலக ஆக்கங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான வளி (காற்று, ஒளி (வெப்பம், குளிர்மை (நீர்) ஆகிய மூன்று கூறுகளும் உடலின் மூன்று கூறுகளாக நின்று, மிகினும் குறையினும் நோய் செய்தல் (94) போல், இயங்குவதாகக் கூறியதை ஒப்பு நோக்கி உணர்க.

- இதில் இறைமையின் ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய மூன்று கூறுகளும் கூறப் பெற்றன. இவற்றுள் அழித்தல் கூறை முன் வைத்தது, நிலையாமைவழி நிலைத்தல் பெருமையை உணர்த்துதற் கென்க

←Ꮕ

கசு விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது. 笛

பொருள் கோள் முறை இயல்பு

பொழிப்புரை வானிலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லது, விழாத அவ்விடத்தில், உலகின் ஒரறிவுயிரினத்திலும் மிகச் சிறியதாகிய பசும்புல்லினது முளையையும் நாம் காண்டது அரிதாகிவிடும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. விசும்பு - வானம். வெப்பத்தால் நீர் கொண்ட மேகம், வானில் ஏறிப் பரந்து படிந்து நிற்பதே, அது குளிரடைந்து மீண்டும் துளியாக மாறுதற்கு ஏதுவாகலின், அதனின்று வீழும் நீர்த்துளியை விசும்பின் துளி என்றார். - 2. துளி - துள் என்னும் வேரடிச் சொல் - துள் துண் - துணுக்கு.

நீர்த்துணுக்கு துளி என்க. - - மழையின் சிறிய அளவாகிய துளியின் இன்மை கூறி, விளைவின் சிறிய அளவாகிய புல்லின் இன்மையும் கூறியது உற்று நோக்கி மகிழத்தக்கது. - ... . . " 3. ஆங்கே - அத்துளி விழாத அவ்விடத்தில். - 4. இஃது, ஒரறிவுயிரின் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ள பூசும்புல்லும் தலைகாட்டாது என்றவாறு ஓரறிவுயிரே தலைகாட்டாதெனின் பிற