பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

94


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 94

கருவும் காணா என்றவாறு.

- புல்தலை தோற்றத்தைக் குறித்தது. உயிர்களின் தோற்றத்தைக் குறித்ததுமாம். - தலையென்றது, உயிரினத் தோற்றத்தின் முதல் கூறின் முதல் உறுப்பையே.

எல்லா உயிர்க்கும் தலைத் தோற்றமே பிறவியின் முதல் வெளிப்பாடு என்க. - புல் என்னாது, பசும்புல் என்றது, எதுகை நோக்கி மட்டுமன்று.

'புறக்காழ னவே புல் என மொழிப' - என்னும் தொல்காப்பிய 18ថា நூற்பாவால், புல் என்பது புறக்காழ்ப்புடையனவாகிய மூங்கில், தென்னை, பனை முதலியவற்றையும் குறிக்குமாகலின், அவையன்றிக் கூற வந்தது, அவற்றிற் கடைநிலையினதும், முதல் தோற்றமுடையதுமாகிய 'பசும்புல்லேயாம் எனல் வேண்டி என்க. - இனி, பசும்புல் என ஒரறிவுயிரின் கடைநிலைப் பிறவியின் தலையும் காண்பு அரிது எனக் குறித்தது, அதனின்றும் பரிந்தெழுந்த புறக்காழனவும் அகக்காழனவும் நினைக்கவும் அரிது எனல் வேண்டி என்க. - இதனால் மழையில்லாமற் போமாயின், ஒரறிவுயிரினும் சிற்றுயிராகிய புல்லும் முளையாமற் போய், நிலம் தன் உயிர்த்தன்மையை இழந்துவிடும் என்றார்.

O

கன். நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும், தடிந்தெழிலி

தானல்கா தாகி விடின். 17

பொருள் கோள் முறை :

தடிந்த எழிலி தான் நல்காது ஆகிவிடின், நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்.

பொழிப்புரை : கடல்நீர் குறைவுறக் கதிரவ வெப்பத்தால் ஆவியாகி மேலெழுந்து திரட்சியுற்றுப் படர்ந்து நின்ற கருமேகம், மீண்டும் அக்கடல் குறைவு நிறைவுறும்படி மழையாகப் பொழிந்து நீர் நல்காவிடில், (அகன்று