பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1. பாயிரவியல் அ-1-3. நீத்தார் பெருமை-3 அதிகார - முன்னுரை:

தன் தனிநிலை உணர்வு கருதும் மாந்தன் திறம், தன்னை முழுமையாக்கிக்கொண்டு, அதனின்று வெளியேறிப் பொதுமையான ஒன்றில் தன்னை நேரடியாக இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுதல். அவ்வாறு ஈடுபடுகின்றவர்களுடைய சிறப்புக் கூறுவது, இது.

இவ்வுலக இயக்கத்திற்கே மூலமாக என்றும் உள்ள அறமுதலாம் இறைமையை முதலில் உணர்த்தினார்.

பின்னர் அதன் அரும் பெரும் ஆற்றல் செயல்படும் வகையில்,

இங்குள்ள அனைத்து இயற்கைக்கும் செயற்கைக்கும் முதற்காரணியாய் அமைந்த, நீர் தரும் மழையினது இன்றியமையாத் தேவையை இரண்டாவதாகக் கூறினார். .

இனி, மூன்றாவதாக, இங்குப் பிறவியுற்ற அனைத்து உயிரினங்களும், அவற்றுள்ளும் படிநிலை வளர்ச்சியுள்ள, மேம்பட்டு விளங்கும் உயர்ந்த, அறிவினமாகிய மாந்த இனமும், அவற்றுக்கு இயல்பாக உள்ள உயிர்க்கருதுதல், உயிரியங்கியல் ஆகிய முயற்சிகளான், தங்களுக்குற்ற ஐம்புலத் துய்ப்புகளையும் அந்நுகர்ச்சிகளால் ஏற்படும் இன்பங்களையுமே அவாவித் திரிகின்ற நிலையில், அம்மாந்தர்களுள், முதிர்ந்த அறிவு