பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

104


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 104

5. நீத்தல் - இருந்து துறத்தல். இருத்தல் உலகியலளவான் இல்லறத்தின்கண் அறத்தொடு பொருந்தியிருந்து துறத்தலாம். இராது நீத்தல் இயலாதாகலின். - இதில், அரிதின் முயன்று தந்நலந் துறந்தாரது பெருமையும்,

துறவதிகாரத்தான் துறவினது பெருமையும் கூறப்பெற்றன. 6. பொதுவாக உயிர்களனைத்தும், சிறப்பாக மாந்தர் அனைத்துக் கூறினரும் தவிராது நசையுற்று நாட்டங்கொண்டு அவற்றுக்காகவே வாழும் ஐம்புல இன்பங்கள் அனைத்தையும் தவிர்ப்பது இயற்கைக்கு மாறான செயலாக இருப்ப, அவ்வுணர்வை மேற்கொள்ளும் மாந்தப் பிறவியினராகிய ஒருவர், அந் நீத்தலை மேற்கொள்வது, ஏதோ வாழ்வியலின்பாற் கொண்ட வெறுக்கையினாலன்று, அதனின்று சிறந்த ஒரு நோக்கத்தினால் இருத்தல் வேண்டும் என்பதே பெருமைக்கு உரியதாகும் என்றும், இதுவே அது பற்றிய அறிஞர்களின் கருத்தாகும் என்றும் அல்லாக்கால் அஃது அத்துணைப் பெருமைக்குரியதில்லை என்றும் உறுதி கூறினார் என்க.

O

உஉ துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. - 22

பொருள் கோள் முறை இயல்பு

பொழிப்புரை (அவ்வாறு மேற் சொன்ன அளவில் தங்களைப் பொதுமை அற நோக்கத்திற்காக ஈடுபடுத்திக்கொள்ளும் எண்ணத்தில் இல்லறம் முதலிய இன்ப நாட்டங்களைத் துறந்தவர்களின் பெருமைக்கு எடுத்துக்காட்டுக் கூறின், இவ்வுலகத்து இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிப் பார்த்து, அவர்களுள் நினைவால் கொள்ளப்பட்ட தன்மையினரைப் போல்வது. -

சில விளக்கக் குறிப்புகள்:

1. பெருமை - விளக்கம் முன்னர்க் கூறப்பெற்றது.

2. துணைக் கூறின் - சான்றாக, எடுத்துக்காட்டாக, ஒப்பாக,

இணையாகக் கூறின்,