பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

அ - 1 - 3 = நீத்தார் பெருமை - 3

நிலைகளைத் தெரிந்து, உணர்ந்து, தெளிந்து, தேர்ந்து மேற்கொள்ளாவிடின், அறவாழ்வின் சிறப்பு நிலைகள் விளங்கா எனறாா. இவ்வாறன்றிப் பிறரைப் பார்த்தோ, பழகியோ, மன வெறுக்கை கொண்டோ, கரவாகவோ, வஞ்சகமாகவோ, கனவுத் துய்ப்புக்காகவோ மேற்கொள்ளும் அறவாழ்வு சிறப்புக்குரியதன்று என்றார்; அவை நீர்த்த தன்மை உடையனவாகலின்.

இங்கும் அறம் துறவாகாது. தந்நலமும் ஐம்புல அவாவுதலும் தவிர்த்த, பொதுநலம் கருதும் நெறிமுறை வாழ்வாம் என்க.

'இருமை வகை தெரிந்து என்பதற்குப் பிறப்பு, வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து - என்னும் பரிமேலழகர் உரை, வேதமதக் கொள்கை தழுவியதாகலானும், அது, பிறப்பு துன்பம் என்று, உலகியலை இழித்துக் கூறும் தன்மை கொண்டதும், வீடு, இன்பம் என்று சென்று கண்டார்ப் போல் கூறும் காணாத கற்பனைக் கருத்தும் ஆகலானும், பொருந்துவ தன்று என விடுக்க என்னை? இம்மை வகையை முழுவதும் அறியப்படா நிலையில், மறுமை வகையை அறியுமாறு யாங்கன்? . X- * . பிறப்பையும் இயற்கை வாழ்வியலையும் துன்பம் என்பது ஆசிரியர் கருத்தாமெனில், அவர் அறங்கூறுவதற்குப் பயனின்றாம் என்க. என்னை, ஒருவர் துன்பத்திற்குப் பாதை காட்டார் ஆகலின்.

. நுண்மை, திண்மைப் பொருள்கள் (சில எடுத்துக் காட்டுகள்)

நுண்மைப் பொருள்கள்: அறிவுணர்வு, மனவுணர்வு, எண்ணம், ஆசை, பாசம், வெறுப்பு, விருப்பு, ஒலி, ஒளி, காற்று, கானா ஒலி, கேளா

ஒளி.

திண்மைப் பொருள்கள் பருப்பொருள்கள் - கல், மண், நிலம், உயிரினங்கள் முதலியன

அவற்றுள் உள்ள இருமைத் தன்மைகள்:

பொதுப் பொருள்கள் :

உயிர்ப்பொருள் x உயிரல் பொருள் இயற்கை X செயற்கை - ஒளி x இருள்: பகல் x இரவு சிறப்புப் பொருள்கள் : .

உயர்திணை x அஃறிணை