பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 09 அ - 1 - 3 - நீத்தார் பெருமை - 3

உச உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

பொருள் கோள் முறை :

ஒர் ஐந்தும் உரன் என்னும் தோட்டியால் காப்பான், வரல் என்னும் வைப்பிற்கு ஒர் வித்து.

பொழிப்பரை ஐம்பொறிகள் ஒவ்வொன்றையும் அவை எழுச்சியுற்றுப் பொருள்களின் மேலும், அவற்றை நோக்கிய செயல்களின் மேலும், அவாவிச் செல்லும் பொழுது அறிவு என்னும் கதவினாலே (அவை அவ்வாறு செல்லாமல் அடைத்துத் தடுத்துக் காத்துக் கொள்பவன். (மக்கள் நலத்துக் குதவும்படி வருங்காலச் சேமிப்புக் கிடங்கில் இட்டு வைக்கப் பெறும் நல்ல ஒரு விதை போன்றவன்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. உரன் - அறிவு, உறுதி, வலிவு என்னும் பொருள்களைப்

பருப்பொருளுக்கும், அறிவு, ஊக்கம் என்னும் பொருள்களை நுண்பொருளுக்கும் தரும் ஒரு செந்தமிழ்ச் சொல். உரன் என்னும் தோட்டி - அறிவு என்னும் கதவு. இதற்குத் துறட்டி, யானைக்குடாரி என்னும் பொருள் கொண்டும், அதையொட்டி 'ஓர் ஐந்தும் என்பதற்கு ஐந்து பொறிகளாகிய ஐந்து யானைகள் என்று கொண்டும் இதற்கு முன் பரிமேலழகர் முதல் பாவாணர் வரையுள்ள உரையாசிரியர்கள் அனைவரும் குன்று முட்டிய குருவி போல் இடர்ப்படுவர். ஐந்து பொறிகளையும் ஐந்து யானைகள் என்று உருவகித்துக் கொள்வது அறத்தவறு. துறட்டியோ குடாரியோ அங்குசமோ கை வைத்த பாகன் ஒருவன், ஐந்து யானைகள் மேல் இவரிச்செல்வது, யாங்கன் ? மேலும், அவை மதங்கொண்டு அடங்காது அலைக்கலுறும் பொழுது, அவ்வைந்தின் மேலும் தாவித் தாவிப் படர்ந்து அவற்றை அப்பாகன் அக்குடாரி கொண்டோ துறட்டி கொண்டோ அடக்குவதும், காப்பதும் எவ்வாறு? இவ்வாறு பொருள் கூறுவது நகைப்பிற்கன்றி உலகியற்குப் பொருந்தாது என்க. இனி, ஓர் ஐந்தும் என்பதற்கு, ஒரு யானை என்று பொருள்

கொண்டு, அதன் ஐந்துறுப்புகளாகிய நான்கு கால்கள், ஒரு துதிக்கை என்று உருவகித்துக் கொள்ளுதலும் பொருந்தாது என்க. ஏனெனில்