பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

112


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 112

தருவன. நல்வித்து - மேலும் பல நல் விளைவுகளுக்கு ஆக்கமாக இருத்தலின் அவற்றினும் இதையே மேம்படுத்திக் கூறினார். நீத்தல், பிறர்க்குத் தன்னையழித்துக் கொள்ளும் விதை போலும் பயன் படுதல் வேண்டும் என்று குறிப்புக் காட்டினார். வித்து ஈகத்திற்கு உருவகம், தம்மின் தம் மக்கள் என்னும் குறளிலும் (68) இதை வழிமொழிந்து வலியுறுத்தினார். இது வீட்டு நிலத்திற் சென்று முளைத்தலின் வித்து என்றார் என்னும் பரிமேலழகரது கூற்று வெற்றுரை. வீட்டுலகம் மோட்சம்) என்பதொன்றும் நிரயம் (நரகம்) என்பதொன்றும் இவ்வுலகத்தினும் வேறாம் எங்கோ உள்ளன வென்பது அறிவியலுக்கும் ஏன், மெய்யறிவியலுத்திக்குமே பொருந்தாத கற்பனைச் செய்தி; மதத்திற்கு மட்டிலும் அதுவும் வேத மதத்திற்கு மட்டுமே பொருந்திய செய்தி. இனி, வீட்டுலகம் செல்வார் வினையின்றி இன்பத் துய்ப்பொன்றே கொண்டிருப்பர் என்பதும், அங்கவர் பசி, விடாய் போலும் எவ்வகை உடல் வருத்தங்களுமின்றி இருப்பர் என்பதும், அது தொடர்பான கற்பனைகளுள் ஒன்றாயிருக்க, அங்கு உழுநிலம் உள்ளதென்பதும், அங்கும் வேளாண்மை நடைபெறுதலும் உண்டென்பதும், அதற்கு இங்கிருந்தும் வித்துகள் போக வேண்டுமென்பதும் அம் மூடக் கற்பனையுள்ளும் புகுத்திய முரண்பட்ட புல்லிய நகைக் கூறாகும். இது மலத்தில் சாணி கலந்தது போலும் மடத்தில் மூடங்கலந்த கூற்றுமாம் என்று இகழ்க இக்குறளடிக்கு அறிஞர் அப்பாத்துரையாரும், வருங்கால இன்ப வாழ்வாகிய இன்பப்பயிர் வளத்துக்குரிய அரிய குமுகாய விதைப் பண்பினர் என்று தம் மணி விளக்கவுரையுள், ஆசிரியர் கருத்தின் புதைமணியைத் துலக்கினார். அவ்வுரை நூல் நழுவிய மணிபோல், மூலக் கோட்டினின்று சிறிது நெகிழ்ந்திருப்பினும், அவரின் உள்நாடிக் கண்டறியும் உணர்வு பாராட்டுக்குரியது.

O

உரு. ஐந்துவித்தான் ஆற்றற் ககல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலும் கரி. - 25

பொருள் கோள் முறை:

ஐந்து அவித்தான் ஆற்றற்கு அகல் விசும்புஉளார் கோமான், இந்திரனே கரி சாலும். .